AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பல்லக்கு பவனி, கம்பம் நடுதல்: பக்தர்களை ஈர்க்கும் சித்திரை விழாக்கள்

Chithirai Festival: மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் சுவாமி-அம்பாள் வீதியுலா பக்தர்களை ஈர்த்து வருகிறது. தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பாகற்காய் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதேவேளை, வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலிலும் சித்திரை திருவிழா தொடங்கி பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பல்லக்கு பவனி, கம்பம் நடுதல்: பக்தர்களை ஈர்க்கும் சித்திரை விழாக்கள்
பல்லக்கு பவனி, கம்பம் நடுதல்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 23 Apr 2026 09:00 AM IST

மதுரை நகரில் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா ஆரம்பித்ததிலிருந்து தினமும் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வருவது பக்தர்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மாசி வீதிகளில் நடக்கும் இந்த ஊர்வலம், நகரின் முக்கிய பகுதிகளை திருவிழா சூழ்நிலையில் மூழ்கடிக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு திரண்டு வந்து, வழியோரங்களில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் திரள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்

மாலை நேரம் தொடங்கியவுடன் குடும்பம் குடும்பமாக பக்தர்கள் திரண்டு வந்து, சாலையோரங்களில் அமைதியாக காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஊர்வலத்தின் போது கலைக்குழுக்களின் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மகிழ்விக்கின்றன. சிறுவர், சிறுமிகள் பல்வேறு தெய்வ வேடங்களில் பங்கேற்பதும் விழாவுக்கு ஒரு தனி அழகை சேர்க்கிறது. இவ்வாறான நிகழ்ச்சிகள் திருவிழாவின் ஆன்மிகத்தையும் கலாச்சாரத்தையும் ஒருங்கிணைத்து காட்டுகின்றன.

தங்கப்பல்லக்கில் புறப்பட்ட சுவாமி-அம்பாள்

சித்திரை திருவிழாவின் 4-ஆம் நாளான இன்று காலை 9 மணியளவில் சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மனும் தங்கப்பல்லக்குகளில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினர். பிரியாவிடை நிகழ்வுடன் தொடங்கிய இந்த ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக புறப்பட்டு வில்லாபுரம் நோக்கி சென்றது. வழியெங்கும் பக்தர்கள் பெருமளவில் திரண்டு, பக்தி உணர்வுடன் தரிசனம் செய்தனர்.

பாகற்காய் மண்டபத்தில் அருள்பாலித்த தெய்வங்கள்

வில்லாபுரத்தில் அமைந்துள்ள பாகற்காய் மண்டபத்தில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளியதும், அங்கு பக்தர்கள் பெருமளவில் திரண்டு வழிபட்டனர். இன்று மாலை வரை அங்கு தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். பின்னர் மாலை 6 மணிக்குப் பிறகு, மீண்டும் ஊர்வலமாக கோவிலுக்கு திரும்புவார்கள். இதனை முன்னிட்டு அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Also Read: சஷ்டி விரதம் என்றால் என்ன? அதன் காரணமும் பலன்களும்

வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழா தொடக்கம்

இதற்கிடையில், தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியுள்ளது. கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த விழா, பாரம்பரிய முறையில் சிறப்பு பூஜைகளுடன் நடத்தப்பட்டது. அத்தி மரக் கிளைகளால் செய்யப்பட்ட கம்பம் முல்லை பெரியாற்றில் பூஜை செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவிலில் நிறுவப்பட்டது.

வரும் நாட்களில் முக்கிய விழா நிகழ்ச்சிகள்

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற உள்ளன. மலர் விமான பவனி, முத்து மற்றும் புஷ்பப் பல்லக்குப் பவனிகள், திருத்தேரோட்டம் போன்றவை பக்தர்களை ஈர்க்கும் வகையில் நடைபெறும். இறுதியாக ஊர் பொங்கலுடன் திருவிழா நிறைவடையும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி, பக்தி உணர்வுடன் விழாவில் பங்கேற்பது இந்த திருவிழாவின் முக்கிய சிறப்பாகும்.

Follow Us