AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சட்டமன்ற தேர்தல் : வாக்குச்சாவடியை தெரிந்துகொள்வது எப்படி? விவரம் இதோ

How to Find Your Polling Booth: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில் வாக்களார்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்களை முன் கூட்டியே தெரிந்துகொள்வது அவசியம். இந்த கட்டுரையில் ஆன்லைன் மூலம் வாக்கு சாவடி விவரங்களை தெரிந்து கொள்வது எப்படி என பார்க்கலாம்.

சட்டமன்ற தேர்தல் : வாக்குச்சாவடியை தெரிந்துகொள்வது எப்படி? விவரம் இதோ
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Apr 2026 19:34 PM IST

சென்னை, ஏப்ரல்  22 : நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கடைசி நேர சிக்கலைத் தவிர்க்க தங்கள் வாக்குச்சாவடி விவரங்களை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டியது முக்கியம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஏப்ரல் , 2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சீரான மற்றும் தடையற்ற வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்காளருக்கும் தனிப்பட்ட வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டிருக்கும். தவறான இடத்திற்கு சென்றால் வாக்களிக்க முடியாமல் போக வாய்ப்பிருக்கிறது. இந்த சிக்கலைத் தவிர்க்க வாக்காளர்கள் தங்கள் வாக்குசாவடிகளை தெரிந்துகொள்வது அவசியம்  குறிப்பாக முதன்முறையாக வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி எங்கு உள்ளது என்பதை முன்பே தெரிந்து கொள்ளுவது அவசியம்.

ஆன்லைனில் எப்படி தெரிந்து கொள்வது?

வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்களை ஆன்லைன் மூலமும் தெரிந்துகொள்ளலாம். இதற்காக வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in/ என்ற இணைய பக்கத்துக்கு சென்று தங்கள் வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

மேற்சொன்ன இணைய பக்கத்துக்கு சென்று வாக்காளர் அடையாள அட்டை எண், உங்கள் மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும். பின்னர் மாவட்டம், தொகுதி உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும். பின்னர் உங்கள் பெயர், வாக்குச்சாவடி விவரங்களை காணலாம்.

வாக்குச்சாவடியை தெரிந்துகொண்டு செல்வதற்கு முன் கூகுள் மேப்பில் தேடினாலும் இலகுவாக வாக்குச்சாவடிக்கு செல்ல முடியும். இதன் மூலம் கடைசி நே பரபரப்பை தவிர்க்க முடியும். வோட்டர்ஸ் ஹெல்ப் லைன் என்ற செயலியின் மூலமும் நம் வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

வாக்களிக்க செல்வதற்கு முன் வாக்காளர் சீட்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், பான் கார், ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள ஆவணங்கள எடுத்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். வாக்களிப்பது நம் ஜனநாயக உரிமை. ஒவ்வொருவரும் வாக்களிப்பதன் மூலம் சரியான வாக்காளர்களை தேர்ந்தெடுக்க முடியும். இதனால் நம் மாநிலத்தின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்பதால் அனைவரும் தவறாது ஜனநாயக கடமையை மேற்கொள்வது அவசியம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Follow Us