AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விடிய விடிய பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள்.. கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் வெடித்த போராட்டம்..

Tamilnadu Assembly Election: தேர்தல் நேரத்தையொட்டி போதிய சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், களத்தில் நிலைமை மோசமாக இருந்ததாகப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். விடிய விடியப் போராட்டம் நீடித்ததால், சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிப்பதில் சிக்கல் ஏற்படும் எனப் பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

விடிய விடிய பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள்.. கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் வெடித்த போராட்டம்..
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 Apr 2026 08:13 AM IST

Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காகச் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், போதிய பேருந்து வசதி இல்லாததால் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விடிய விடியக் காத்திருந்து, பின் சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: Actor Ajithkumar: வெள்ளை நிற கோட் சூட்.. முதல் ஆளாக ஓட்டு போட வந்த நடிகர் அஜித்!

விடிய விடிய காத்திருந்த பொதுமக்கள்:

தமிழகம் முழுவதும் இன்று காலை 7:00 மணி முதல் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காகச் சென்னையில் தங்கியிருந்து பணிபுரியும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், நேற்று இரவு முதலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவியத் தொடங்கினர். ஆனால், நள்ளிரவைத் தாண்டியும் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், சிறுவர்கள் மற்றும் முதியவர்களுடன் வந்திருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

திடீர் சாலை மறியல் மற்றும் பரபரப்பு:

நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால் ஆத்திரமடைந்த பயணிகள், பொறுமை இழந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு முன்புறம் உள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

“எங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற விடாமல் எங்களைத் தடிக்கிறீர்களா?” எனப் பயணிகள் காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினர். போராட்டத்தின் போது நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டக் களத்தில் சிலர் அரசியல் கட்சிப் பதாகைகளைக் காட்டியும் கோஷமிட்டதால் அங்கு கூடுதல் பதற்றம் நிலவியது.

பயணிகளின் குற்றச்சாட்டு:

தேர்தல் நேரத்தையொட்டி போதிய சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், களத்தில் நிலைமை மோசமாக இருந்ததாகப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். விடிய விடியப் போராட்டம் நீடித்ததால், சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிப்பதில் சிக்கல் ஏற்படும் எனப் பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

இதையும் படிக்க: வாக்குச்சாவடிக்குள் போட்டோ, வீடியோ எடுக்ககூடாது.. மீறினால் சிறை தண்டனை..

தற்போது கூடுதல் பேருந்து வசதிகள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தேர்தல் நாளன்று வாக்காளர்கள் தவிப்பிற்குள்ளானது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us