AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜனநாயகக் கடமையை ஆற்றினார் விஜய்.. 2026 தேர்தல் களத்தில் முதல் முறையாகத் தனது கட்சியின் சின்னத்திற்கு வாக்களித்தார்..

Tamilnadu Assembly Election: அந்தவகையில், தவெக தலைவர் விஜய்யும் இன்று காலை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். இதற்காக தனது இல்லத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் வாக்குச்சாவடிக்கு சென்ற அவர், மிகுந்த கூட்டத்தில் மத்தியில் வாக்குச்சாவடிக்குள் சென்றார். அவரை காண வாக்குச்சாவடியில் ரசிகர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. 

ஜனநாயகக் கடமையை ஆற்றினார் விஜய்.. 2026 தேர்தல் களத்தில் முதல் முறையாகத் தனது கட்சியின் சின்னத்திற்கு வாக்களித்தார்..
விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 Apr 2026 09:06 AM IST

Tamilnadu Polls 2026: சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற ஆர்வமுடன் வாக்குச்சாவடி முன் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 6.30 மணியளவில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். குறிப்பாக வெயிலுக்கு முன்பே தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என்பதற்காக, காலையிலேயே அதிகளவில் மக்கள் வாக்குச்சாவடியில் திரண்டுள்ளனர்.

முதல் ஆளாக வாக்களித்த அஜித்:

அந்தவகையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குச் செலுத்தவதற்காக நடிகர் அஜித்குமார் காலையிலேயே முதல் ஆளாக வருகை தந்துள்ளார். காலை 7 மணிக்கு தான் வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், அவர் வாக்குச்சாவடிக்கு 6.45 மணியளவில் வருகை தந்து, 7 மணிக்கு முன்பே தனது வாக்கைச் செலுத்திச் சென்றார். இதற்காக அவர் வெள்ளை நிற இன்னோவா காரில், வெள்ளை நிற கோட் சூட் அணிந்தபடி வந்திருந்தார்.

வாக்களித்த அரசியல் தலைவர்கள்:

அதேபோல், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், மநீம தலைவர் கமல்ஹாசன், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என ஏராளமான அரசியல் தலைவர்களும் காலையிலேயே தங்களது வாக்குகளை செலுத்தினர். இவ்வாறு, நடிகர்களும், அரசியல் தலைவர்களும் காலையிலேயே மிகுந்த ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

வாக்களித்த தவெக தலைவர் விஜய்:

அந்தவகையில், தவெக தலைவர் விஜய்யும் இன்று காலை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். இதற்காக தனது இல்லத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் வாக்குச்சாவடிக்கு சென்ற அவர், மிகுந்த கூட்டத்தில் மத்தியில் வாக்குச்சாவடிக்குள் சென்றார். அவரை காண வாக்குச்சாவடியில் ரசிகர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

2021 தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்களித்த விஜய்:

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது பெரும் பேசுபெருளானது. நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து அந்த பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்தார். மிக வேகமாக சைக்கிளை மிதித்து வந்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவ்வாறு, இந்த தேர்தலிலும் அவர் சைக்கிளில் சென்று வாக்களிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

காரில் வாக்குச்சாவடிக்கு சென்ற விஜய்:

ஏனெனில், தேர்தல் பரப்புரையின் போது, ஆங்காங்கே தனது பரப்புரை வாகனத்தில் இருந்து இறங்கி, சைக்கிளில் சென்று வாக்குசேகரித்து வருவதை விஜய் வாடிக்கையாக கொண்டிருந்தார். அதனால், ஜனநாயக கடமையாற்ற அவர் சைக்கிளில் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்காக அவரது வீட்டின் வாசல் முன்பு காலையிலேயே அதிகளவில் தொண்டர்கள் காத்திருந்தனர். ஆனால், விஜய் தனது காரிலேயே வாக்குச்சாவடிக்கு சென்றார்.

மேலும் படிக்க: Tamil Nadu Election 2026 LIVE: தமிழ்நாட்டின் தேர்தல் திருவிழா.. வாக்குப்பதிவு விறுவிறுப்பு

Follow Us