Poonamalle Constituency Election 2026: வேகமான நகர்புற வளர்ச்சியை காணும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி.. வெற்றி யாருக்கு?

Tamil Nadu Elections 2026: மக்கள் முன்வைக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது போக்குவரத்து நெரிசல். வளர்ச்சி திட்டங்கள் இருந்தாலும், அலுவலக நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. சாலைப் பணிகள் மற்றும் மெட்ரோப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Poonamalle Constituency Election 2026: வேகமான நகர்புற வளர்ச்சியை காணும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி.. வெற்றி யாருக்கு?

கோப்பு புகைப்படம்

Published: 

26 Mar 2026 22:05 PM

 IST

சென்னை, மார்ச் 26, 2026: பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி என்பது திருவள்ளூர் மாவட்டம் அமைந்துள்ளது. இது திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி, பூந்தமல்லி, ஐயப்பந்தாங்கல், காட்டுப்பாக்கம், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. சென்னை புறநகர் விரிவாக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் தொகுதியாக இது பார்க்கப்படுகிறது. பூந்தமல்லி பகுதியில் சென்னை–பெங்களூர் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. மேலும், மெட்ரோ போன்ற நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களும் இந்த தொகுதியில் நடைபெற்று வருகின்றன.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி சுமார் 1,49,578 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் தக்காளி மக்கள் கட்சியின் ராஜமன்னார் 55,468 வாக்குகளுடன் இருந்தார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் நான்காவது இடத்தில் மக்கள் நீதி மய்யம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மாம்பழம் சின்னம் – ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் – விவரம் இதோ

பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி திமுகவிற்கு சற்றே வலுவான தொகுதியாகக் கருதப்படுகிறது. வெற்றி வாய்ப்பும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

இந்த தொகுதியில் சுமார் 2.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக இருந்தாலும், மக்கள் தரப்பில் பல்வேறு பிரச்சனைகள் முன்வைக்கப்படுகின்றன.

தொகுதியில் இருக்கும் முக்கிய பிரச்சனைகள்:

அதில் முக்கியமானது போக்குவரத்து நெரிசல். வளர்ச்சி திட்டங்கள் இருந்தாலும், அலுவலக நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. சாலைப் பணிகள் மற்றும் மெட்ரோப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், கோடைக்காலங்களில் குடிநீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. மழைக்காலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன.

மேலும் படிக்க: காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி. செல்வம்.. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்…

சென்னையின் பிற பகுதிகளுக்கு போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், பூந்தமல்லி தொகுதியில் குறிப்பாக பேருந்து வசதி குறைவாக இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

யாருக்கு வெற்றி வாய்ப்பு?

மொத்தத்தில், பூந்தமல்லி தொகுதி வேகமாக வளர்ந்து வரும் புறநகர் பகுதி என்பதால், அடிப்படை வசதிகள், போக்குவரத்து, குடிநீர் போன்றவை தேர்தலில் முக்கிய தீர்மான காரணிகளாக உள்ளன. ஒவ்வொரு வேட்பாளரின் வாக்குறுதிகளைப் பொறுத்தே இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..