ராமதாஸ் தலைமையில் நாளை நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. கூட்டணி குறித்து முக்கிய முடிவு?

தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பின் படி கட்சியின் தலைவர் அன்புமணிதான் என்றும், மாம்பழ சின்னம் அன்புமணிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கான உரிமை தற்போது அன்புமணியிடம் உள்ளது. இதன் காரணமாக, கட்சி நிறுவனர் ராமதாஸ் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பல முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார்.

ராமதாஸ் தலைமையில் நாளை நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. கூட்டணி குறித்து முக்கிய முடிவு?

கோப்பு புகைப்படம்

Published: 

25 Feb 2026 07:03 AM

 IST

விழுப்புரம், பிப்ரவரி 25, 2026: தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. அதே சமயத்தில், தொகுதி பங்கீடு குறித்தும் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பிப்ரவரி 26ஆம் தேதியான நாளை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்தும், அரசியல் நிலைப்பாடு குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால், அதிமுக மற்றும் திமுக பிரதான கட்சிகளாக விளங்குகின்றன. இந்த இரண்டு கட்சிகளுக்குமிடையே தீவிரமான போட்டி நிலவுகிறது. இதில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

மேலும் படிக்க: “அதிமுகவிடம் 35 தொகுதிகள் கேட்கும் பாஜக”.. நாளை தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடிவு?

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:

திமுக கூட்டணியை எடுத்துக்கொண்டால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம், தேமுதிக, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதே சமயத்தில், அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அன்புமணியின் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க: புதிய கட்சியை தொடங்கிய சசிகலா  – கட்சி கொடியும் வெளியீடு

பாமகவின் உட்கட்சி விவகாரம்:

இந்த சூழலில், பாட்டாளி மக்கள் கட்சியை எடுத்துக்கொண்டால், கடந்த ஓராண்டு காலமாக தந்தை–மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்புமணி ஒரு பக்கம், ராமதாஸ் ஒரு பக்கம் என இருவரும் தனித்தனியாக கட்சியின் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்புமணியைப் பொருத்தவரையில், கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் மாமல்லபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் ராமதாஸ் ஆதரவாளர்கள் யாரும் கலந்து கொள்வதில்லை. அதே சமயத்தில், ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அலுவலகத்தில் அனைத்து கட்சி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பின் படி கட்சியின் தலைவர் அன்புமணிதான் என்றும், மாம்பழ சின்னம் அன்புமணிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கான உரிமை தற்போது அன்புமணியிடம் உள்ளது.

ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம்:

இதன் காரணமாக, கட்சி நிறுவனர் ராமதாஸ் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பல முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நாளை பாமக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லமான தைலாபுரம் தோட்டத்தில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது

சூனியக்காரி எனக்கூறி பெண்ணை உயிரோடு எரித்துக்கொன்ற கிராமத்தினர் - அதிர்ச்சி சம்பவம்
இரவில் குழந்தைகள் எழுந்து உட்கார்ந்து சத்தமாக கத்துகிறதா? இதுதான் காரணம்
நோயாளிகளின் 9 பேரின் கண்கள் நீக்கம்...பார்வையிழந்த 9 பேர்... உத்தரப்பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
அப்பாவின் பெயர் கட்டாயமில்லை.. சிறுமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு