பரபரப்பை ஏற்படுத்திய லேட்டஸ்ட் கருத்து கணிப்பு – திமுக ஆட்சியை தக்கவைக்குமா? தவெக நிலை என்ன?

Exit Poll : தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மும்பை சட்டா பஜார் (Mumbai Satta Bazar Prediction) கணிப்புகளும் தேர்தல் பரபரப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன.

பரபரப்பை ஏற்படுத்திய லேட்டஸ்ட் கருத்து கணிப்பு - திமுக ஆட்சியை தக்கவைக்குமா? தவெக நிலை என்ன?

Mumbai Satta Bazar Prediction

Updated On: 

03 May 2026 20:50 PM

 IST

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெறவுள்ளது. முடிவுகள் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னாள், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் (Exit Polls), மும்பை சட்டா பஜார் (Mumbai Satta Bazar Prediction) கணிப்புகளும் தேர்தல் பரபரப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களின் முடிவை ஓட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

தாக்கத்தை பிடிக்குமா தளபதி விஜய்யின் வருகை?

தமிழக அரசியல் களம், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மும்முனைப் போட்டியைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 145 முதல் 155 இடங்கள் வரை கைப்பற்றி, திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இம்முறை அனைவரின் பார்வையும் நடிகர் விஜய் தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மீதே பதிந்துள்ளது. விஜயின் கட்சி 7 முதல் 9 இடங்கள் வரை கைப்பற்றக்கூடும் என்று முதற்கட்டக் கணிப்புகள் கூறினாலும், இளைஞர்களின் வாக்குகள் சிதறும் பட்சத்தில் தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறக்கூடும். இதற்கிடையில், சந்தை கணிப்புகளின்படி, அதிமுக வெறும் 45 முதல் 65 இடங்களுக்குள் மட்டுமே சுருங்கிவிடக்கூடும் என்று தெரிகிறது.

இதையும் படிக்க : பாஜகவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு.. முகவர்களுக்கு தேர்தல் பொறுப்பாளர் முக்கிய உத்தரவு!

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில், மொத்தம் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இடங்களின் எண்ணிக்கை 148 ஆகும். மும்பை சட்டா பஜார் கணிப்புகளின்படி, பாரதிய ஜனதா கட்சி (BJP) இம்முறை 175 முதல் 185 இடங்கள் வரை கைப்பற்றி, அமோக வெற்றி பெறும் என தெரிகிறது. இந்தக் கணிப்பு உண்மையானால், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸின் (TMC) பத்தாண்டுகால ஆட்சிக்கு முடிவுக்கு வரும் என்றும், வங்க மண்ணில் பாஜக ஒரு புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியதாகவும் அமையும். மம்தா பானர்ஜியின் கட்சி 127 முதல் 132 இடங்களுக்குள் மட்டுமே பெறும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அஸ்ஸாம் மற்றும் கேரளாவில் பழைய சாதனைகள் முறியடிக்கப்பட உள்ளன.

அசாம்

அசாமில், பாஜகவின் ஆதிக்கம் அசைக்க முடியாததாகத் தெரிகிறது. முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில், பாஜக ஹாட்ரிக் வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. மொத்தமுள்ள 126 தொகுதிகளில், பாஜக கூட்டணி 85 முதல் 92 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கட்சி 34 முதல் 38 இடங்கள் வரை பெறும் என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கேரளா

மறுபுறம், பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு மரபை நிலைநிறுத்தும் வகையில், கேரள வாக்காளர்கள் மீண்டும் ஒரு மாற்றத்தை விரும்புவதாகத் தெரிகிறது. இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு (LDF) அதிர்ச்சி அளிக்கும் வகையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 78 முதல் 85 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சியைப் பிடிக்கத் தயாராக இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் பாஜக 2 முதல் 3 இடங்களை வெல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : தேர்தல் முடிவுக்கு ரெடியா? எடப்பாடியுடன் மாஜிக்கள் திடீர் சந்திப்பு.. சேலத்தில் நடப்பது என்ன?

புதுச்சேரியில் ஒரு கடும் போட்டி

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு இடையே கடும் இழுபறிப் போட்டி நிலவி வருகிறது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 15 முதல் 18 இடங்களையும், ‘இந்தியா’ கூட்டணி (INDIA bloc) 14 முதல் 17 இடங்களையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கு, சுயேச்சைக் வேட்பாளர்கள் ‘முடிவு நிர்ணயிக்கும் சக்திகளாக’ உருவெடுக்கும் வாய்ப்புள்ளது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..