AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக தலைவர் விஜய்க்கு திமுக கூட்டணி கட்சியினர் திடீர் ஆதரவு.. அரசியலில் புதிய பரபரப்பு!

Congress MP Manickam Thakur: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு திடீரென ஆதரவாக பேசி வருகின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது.

தவெக தலைவர் விஜய்க்கு திமுக கூட்டணி கட்சியினர் திடீர் ஆதரவு.. அரசியலில் புதிய பரபரப்பு!
விஜய்க்கு மாணிக்கம் தாகூர் திடீர் ஆதரவு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 03 May 2026 21:37 PM IST

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் எம். பி. மாணிக்கம் தாகூர் முகாமிட்டுள்ளார். அப்போது, தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் சற்று வித்தியாசமாக இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை இளைஞர்களிடம் அரசியல் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. பொதுவாக இளைஞர்கள் அரசியலில் பெரிதளவு ஆர்வம் காட்டுவது கிடையாது. ஆனால், இந்த தேர்தலில் அதிக அளவிலான இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதேபோல, அதிக அளவிலான இளைஞர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் அதிக அளவில் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் திரண்டதை பார்க்க முடிந்தது. இதில், சுமார் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை விஜய்க்கு வாக்களித்ததாக கூறியிருக்கிறார்கள்.

தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தாக்கம் இருக்கும்

எனவே, நாளை வெளியாக உள்ள தேர்தல் முடிவில் விஜயின் தாக்கம் நிச்சயமாக இருக்கும். அதே வேளையில் அதிமுக கூட்டணிக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். இதே போல, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், தமிழக வெற்றிக் கழகம் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆச்சரியமான முடிவுகளை வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் இளைஞர்கள் எழுச்சியோடு வாக்களித்தனர்.

மேலும் படிக்க: வழக்கறிஞர் நெல்சனை வீடு புகுந்து தாக்கிய நாம் தமிழர் ஆதரவாளர்? – வெளியான பரபரப்பு தகவல்

தவெக விஜய் பின்னால் சென்ற இளைஞர்கள்

இவர்களில் ஒரு தரப்பினர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பின்னால் சென்றனர். இந்த மன மாற்றத்திற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, இது மனமாற்றம் இல்லை. இந்த மாற்றத்தை தற்போது தான் புரிந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார். தமிழக அரசியல் களத்துக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இதற்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஆதரவு தெரிவித்ததாகவும். ஆனால், திமுகவுடன் திடீரென கூட்டணியை முறிப்பது நல்லதல்ல என்று சோனியா காந்தி கூறியதாக கூறப்படுகிறது.

விஜய்க்கு ஆதரவாக பேசும் திமுக கூட்டணி கட்சியினர்

இதன் காரணமாகவே, தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் முடிவை கைவிட்ட காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்து, கூடுதல் தொகுதிகள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஆகியவற்றை பெற்று தேர்தலை சந்தித்தது. தற்போது, தேர்தல் முடிவுகள் நாளை திங்கள்கிழமை வெளியாக உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் விஜய்க்கு ஆதரவாக பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க: பரபரப்பை ஏற்படுத்திய லேட்டஸ்ட் கருத்து கணிப்பு – திமுக ஆட்சியை தக்கவைக்குமா? தவெக நிலை என்ன?

Follow Us