வழக்கறிஞர் நெல்சனை வீடு புகுந்து தாக்கிய நாம் தமிழர் ஆதரவாளர்? – வெளியான பரபரப்பு தகவல்
வழக்கறிஞர் நெல்சன் என்பவர் வீட்டில் ஏற்பட்ட மோதலில் அவரை தாக்கி கைகலப்பில் ஈடுபட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியின் ராஜா பேரோன் என்பவர் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை, மே 3 : வழக்கறிஞர் நெல்சன் என்பவர் வீட்டில் ஏற்பட்ட மோதலில் அவரை தாக்கி கைகலப்பில் ஈடுபட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியின் ராஜா பேரோன் என்பவர் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக சமூக வலைதளங்களில் வழக்கறிஞர் நெல்சன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் சாட்டை துரைமுருகன் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுகவிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு விஜய்யை நாதகவினர் விமர்சிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
வழக்கறிஞர் நெல்சனை வீடுபகுந்து தாக்கிய நாம் தமிழர் ஆதரவாளர்?
இதற்கு பதிலளித்த நாதக கட்சியின் சாட்டை துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் என்றார். இந்த நிலையில் சமீபத்தில் வீடியோ வெளியிட்ட நெல்சன், விருதுநகரில் சீமான் ரூ.50 கோடி மதிப்பில் சொத்து வாங்கியதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் உடற்பயிற்சி நிபுணரான ராஜா பேரோனின் மூலிகை மருந்தை உரிய அனுமதி இல்லாமல் விற்பனை செய்ததாக கூறியிருக்கிறார்.
வழக்கறிஞர் நெல்சனின் பதிவு
View this post on Instagram
இந்த நிலையில் மே 3, 2026 அன்று ராஜா பேரோன் என்பவரும் அவரது மனைவியும் நெல்சனின் வீட்டுக்கு இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆதாரம் இல்லாமல் தங்கள் மீது குற்றச்சாட்டு தெரிவித்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது நெல்சனை ராஜா பேரோன் தாக்க முயன்றதாகவும் அப்போது அக்கம் பக்கத்தினர் வந்து அவரை தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் ராஜா பேரோன் தான் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரு தரப்பையும் சமாதானப்படுத்தியிருக்கின்றனர். தற்போது இருவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.