M.R.K.Panneerselvam Tamil Nadu Election: அமைச்சர் பதவிக்கு அடித்தளமான குறிஞ்சிப்பாடி தொகுதி.. மீண்டும் வெற்றிக் கனியை சுவைப்பாரா எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!

Tamil Nadu Elections 2026: திமுகவில் எம். ஆர். கே. பன்னீர் செல்வத்துக்கு எம்எல்ஏ பதவி முதல் அமைச்சர் பதவி வரை பெற்றுத் தந்த குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் வருகிற தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது. மீண்டும் வெற்றித் தடம் பதிப்பாரா.

M.R.K.Panneerselvam Tamil Nadu Election: அமைச்சர் பதவிக்கு அடித்தளமான குறிஞ்சிப்பாடி தொகுதி.. மீண்டும் வெற்றிக் கனியை சுவைப்பாரா எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!

எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்துக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது.

Published: 

25 Mar 2026 19:30 PM

 IST

திமுக அமைச்சரவையில் வேளாண், உழவர் நலத்துறை அமைச்சராக இருந்து வருபவர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம். இவர், கடந்த 1957- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25- ஆம் தேதி எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி- ராதாமணி தம்பதிக்கு மகனாக பிறந்தார். திமுகவில் இணைந்த இவர், 1996- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டு தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, 2001- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தனது 2-ஆவது வெற்றியை பதிவு செய்தார். இதை தொடர்ந்து, 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு 3- ஆவது முறையாக எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

அமைச்சர் பொறுப்பில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

பின்னர், 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் களம் இறக்கப்பட்ட எம். ஆர். கே. பன்னீர்செல்வம் 4- ஆவது முறையாக எம்எல்ஏ பதவியை அடைந்தார். அப்போது அவருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான அமைச்சர் இலாக வழங்கப்பட்டது. பின்னர், 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதுடன் தற்போது வேளாண் மற்றும் உலக நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

மேலும் படிக்க: Agri S. S. Krishnamurthy Tamil Nadu Election: அதிமுகவில் “வேளாண்” புனைப்பெயருக்கு சொந்தக்காரர்… எம்எல்ஏ பதவியை தக்கவைத்துக் கொள்வாரா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி!

முதல் தேர்தலில் தோல்வியை தழுவிய பன்னீர் செல்வம்

கடந்த 1991- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் களமிறக்கப்பட்ட எம். ஆர். கே. பன்னீர்செல்வம் 30.57 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். 1996 சட்டமன்றத் தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் மாறி போட்டியிட்ட எம். ஆர். கே. பன்னீர்செல்வம் 54 .99 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2001 தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் வெற்றி பெற்றதுடன் 55.78 சதவீத வாக்குகள் பெற்றார். 2006 தேர்தலில் மீண்டும் வெற்றியை பதிவு செய்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் 41.16 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு

2016 சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் களமிறங்கிய எம். ஆர். கே. பன்னீர்செல்வம் 44.03 சதவீத வாக்குகளும் 2021 சட்டமன்றத் தேர்தலில் 51.05 சதவீத வாக்குகளும் பெற்று எம். எல். ஏ. பதவியை தக்க வைத்துக் கொண்டார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்  களமிறக்கப்படுவதுடன், வெற்றி வாய்ப்பும் அவருக்கு சாதகமாகவே இருக்கும் என்று கட்சி வட்டாரத்தினர் கூறி வருகின்றனர். எதிர்கட்சிகள் சார்பில் களம் இறக்கப்படும் வேட்பாளர்களை பொருத்து கள நிலவரம் மாறுபட வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க: C. V. Ganesan Tamil Nadu Election: திட்டக்குடியில் இருமுறை வெற்றி பெற்ற சி.வெ.கணேசன்.. இந்த முறை வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது!

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..