K.K.S.S.R.Ramachandran Tamil Nadu Election: எம்எல்ஏ பதவியில் 9 முறை… அமைச்சர் பதவியில் 6 முறை… அருப்புக்கோட்டையில் வெற்றியை பறைசாற்றுவாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!

Tamil Nadu Elections 2026: அதிமுக மற்றும் திமுகவில் சட்டமன்ற தேர்தலில் 9 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாகவும், 6 முறை அமைச்சராகவும் இருந்தவரும், இருந்து வருபவருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீண்டும் அருப்புக்கோட்டை தொகுதியில் தனது வெற்றியை பறைசாற்றுவாரா. கள நிலவரம் எப்படியுள்ளது.

K.K.S.S.R.Ramachandran Tamil Nadu Election: எம்எல்ஏ பதவியில் 9 முறை... அமைச்சர் பதவியில் 6 முறை... அருப்புக்கோட்டையில் வெற்றியை பறைசாற்றுவாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!

அருப்புக்கோட்டை தொகுதியி்ல் வெற்றியை பறைசாற்றுவாரா ராமச்சந்திரன்

Updated On: 

01 Apr 2026 11:31 AM

 IST

தமிழகத்தில் திமுக அமைச்சரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக இருந்து வருபவர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன். இவர், கடந்த 1949- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8- ஆம் தேதி ரங்கநாதன் ரெட்டியார்- அமராவதி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். சிறு வயது முதல் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்து வந்த ராமச்சந்திரன் தனது ஊரில் தங்க கலசம் எம்ஜிஆர் ரசிகர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கி எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்ற செயலாளராக உயர்ந்தார். எம்ஜிஆரிடம் நெருங்கி பழகி வந்த ராமச்சந்திரன் முதன்முதலாக சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் களமிறக்கப்பட்டார். அப்போது, தனது வெற்றியை பதிவு செய்ததுடன் எம்ஜிஆர் அமைச்சரவையில் கூட்டுறவு பொதுப்பணித்துறை மின்சார துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறிய ராமச்சந்திரன்

பின்னர், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அணியில் இணைந்து அவரது நம்பிக்கைகுரியவராக மாறினார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது, கருணாநிதி அமைச்சரவையில் சுகாதாரத்துறை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கைத்தறித்துறை அமைச்சராக பதவி வகித்தார். சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 6 முறை விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் ஒரு முறை அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 2 முறை என 9 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார் ராமச்சந்திரன்.

மேலும் படிக்க: தேசிய அரசியல் டூ மாநில அரசியல்.. மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடிப்பாரா எஸ்.ரகுபதி!

6- ஆவது முறையாக அமைச்சர் பதவியில்

இதில், 6- ஆவது முறையாக அமைச்சர் பதவிகளும் வைத்து வருகிறார். கடந்த 1977- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் களமிறங்கிய ராமச்சந்திரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார் மேகசாமியை வீழ்த்தி 38,772 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1980 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் திமுக வேட்பாளர் சவுதி சுந்தரபராட்டியை வீழ்த்தி 54,720 வாக்குகள் வெற்றி வெற்றியை பதிவு செய்தார். 1984 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கருப்பசாமியை வீழ்த்தி 58,745 வாக்குகள் பெற்று வெற்றியை தன தாக்கி கொண்டார்.

விளாத்திக்குளத்திலும் வெற்றி வாய்ப்பு

இதே போல, 1989 சட்டமன்ற தேர்தலில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் மாறிப் போட்டியிட்ட ராமச்சந்திரன் திமுக வேட்பாளர் குமார் வீழ்த்தி 33,951 வாக்குகள் பெற்றார். 1991 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கிய ராமச்சந்திரன் அதிமுக வேட்பாளர் கருப்பசாமியை வீழ்த்தி 59,942 வாக்குகள் பெற்றார். இதே போல, 1996, 2001, 2006, 2011 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் தனது வெற்றியை சொந்தமாக்கிக் கொண்டார்.

மீண்டும் வெற்றியை பறைசாற்றுவாரா ராமச்சந்திரன்

பின்னர் 2011, 2016, 2021 சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதிக்கு மாறிய கே.கே.எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரன் அங்கேயும் வெற்றியை பதிவு செய்தார். தற்போது, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக இருந்து வருகிறார். வருகின்ற தேர்தலிலும் தனது வெற்றியை பறைசாற்றுவார் என்றே தெரிகிறது.

மேலும் படிக்க: திருப்பத்தூரில் தோல்வியே கண்டிராத கே.ஆர்.பெரியகருப்பன்.. அமைச்சரவையில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வாரா!

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..