ஒரு புறம் மநீம தலைவர் கமல்ஹாசன்… மறுபுறம் பாமக நிறுவனர் ராமதாஸ்.. சூறாவளி பிரசாரம் பயண திட்டம்!
Kamal Haasan And Ramadoss Campaign Plan: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் சசிகலா - பாமக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் தனித்தனியே பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

ராமதாஸ் மற்றும் கமல்ஹாசன் சூறாவளி பிரசார பயண திட்டம்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு 11 நாள்களே உள்ளன. இதனால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மேற்கொள்ளவிற்கும் பிரச்சார பயணத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், வருகிற ஏப்ரல் 17- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) சென்னை கிழக்கு மாவட்டத்தில் துறைமுகம் சட்டமன்ற தொகுதி, சென்னை வடக்கு மாவட்டத்தில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, சென்னை கிழக்கு மாவட்டத்தில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
சென்னை மேற்கு மாவட்டத்தில் பிரசாரம்
இதே போல, ஏப்ரல் 18- ஆம் தேதி ( சனிக்கிழமை) சென்னை தென்மேற்கு மாவட்டத்தில் தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதி மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி, சென்னை மேற்கு மாவட்டத்தில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி, சென்னை தெற்கு மாவட்டத்தில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்கு அடுத்தபடியாக ஏப்ரல் 19- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் அவிநாசி சட்டமன்றத் தொகுதி, கோவை மாநகரில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
மேலும் படிக்க: தேர்தலுக்கு பின் திமுக சிதறும்.. “கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்”.. புயலை கிளப்பிய அண்ணாமலை!!
பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம்
இதேபோல, ஏப்ரல் 20- ஆம் தேதி ( திங்கள்கிழமை) திருச்சி தெற்கு மாவட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி, திருச்சி மத்திய மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மற்றும் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதே போல பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், சசிகலா தொடங்கிய அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், தனது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
சேலம் முதல் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வரை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 12- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) சேலம் மேற்கு தொகுதி, 13- ஆம் தேதி தர்மபுரி தொகுதி, 16- ஆம் தேதி கும்பகோணம் தொகுதி, 17- ஆம் தேதி காட்டுமன்னார்கோவில் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி ஆகியவற்றில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதேபோல, ஏப்ரல் 18- ஆம் தேதி விருதாச்சலம் தொகுதி மற்றும் திட்டக்குடி தொகுதி, புவனகிரி தொகுதி, 19- ஆம் தேதி செய்யாறு, போளூர் மற்றும் கலசப்பாக்கம் தொகுதி, 20- ஆம் தேதி விக்கிரவாண்டி, செஞ்சி, கீழ்பெண்ணாத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
மேலும் படிக்க: “அடுத்த 10 நாட்கள் மிக முக்கியம்”.. தவெக தொண்டர்களுக்கு விஜய் போட்ட கட்டளை.. அதிரும் தேர்தல் களம்!!