தவெக கோட்டையாக கொங்கு மண்டலம் மாறும்…கே.ஏ.செங்கோட்டையன் சூளுரை!

K A Sengottaiyan: கொங்கு மண்டலத்தில் உள்ள 29 சட்டமன்ற தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதுடன், அந்த மண்டலம் தவெகவின் கோட்டையாக மாறும் என்று அந்தக் கட்சியின் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

தவெக கோட்டையாக கொங்கு மண்டலம் மாறும்...கே.ஏ.செங்கோட்டையன் சூளுரை!

தவெக கோட்டையாக கொங்கு மண்டலம் மாறும்

Updated On: 

08 Feb 2026 19:45 PM

 IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட பொதுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 8) நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் பங்கேற்று பேசியதாவது: கொங்கு மண்டலத்தில் 29 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தை வெற்றி பெற வைப்பதே எனது இலக்காக இருக்கும். தவெக தலைவர் விஜய் யாரை கை காண்பிக்கிறாரோ அவர் தான் சட்டமன்ற உறுப்பினராக வருவார். இந்த தொகுதியில் அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்தவர் தான் வெற்றி பெறுவார்கள் என்று சிலர் கூறுகின்றனர். தற்போது நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற கூட்டத்தை பார்த்து அவர்களது எண்ணத்தில் மாற்றம் ஏற்படும். இன்று இரவு முதல் அவர்களது தூக்கம் கெட்டுப் போய்விடும்.

நாட்டின் நிர்வாகத்தை மாற்ற நல்ல தலைமை தேவை

ஒரு நாட்டை மாற்றி காண்பிப்பதற்கு ஒரு நல்ல தலைமை தேவையாகும். தமிழகத்தில் தற்போது கொலை, கொள்ளை நடைபெறும் அலங்கோல ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள தவறுகளை திருத்தும் ஒரே சக்தி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மட்டுமே. நடிகர் நாட்டை மட்டுமல்ல, நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற வரலாறு படைக்கும் தலைவனாக விஜய் வருவார். சில கட்சிகளின் கூட்டத்துக்கு பணம் கொடுத்து கூட்டத்தை கூப்பிட்டு வருகின்றனர். ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்துக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இவ்வளவு கூட்டம் கூடுகிறது.

மேலும் படிக்க: சேலத்துக்கு உங்க விஜய் நான் வரேன்…திட்டமிட்டபடி மக்கள் சந்திப்பு..நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி!

ரூ.2 கோடி கொடுத்து கூட்டம் கூட்டும் கட்சிகள்

இது போன்ற கூட்டத்தை மற்ற கட்சிகளுக்கு கூட்ட வேண்டும் என்றால் குறைந்தது ரூ.2 கோடி செலவு செய்ய வேண்டி வரும். அண்மையில் திமுகவின் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதற்கு சுமார் ரூ.110 கோடி செலவு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் ரூ.1000, பெண்களுக்கு சேலைகள், பேருந்து வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அந்த கூட்டத்துக்கு பொதுமக்கள் எழுச்சி இல்லை.

234 தொகுதிகளிலும் விஜய் குறிப்பிடும் நபர்தான் எம்எல்ஏ

துபாயில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிலரிடம் பேசினேன். அப்போது, அவர்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சுமார் 3 லட்சம் பேர் ரூ.1 லட்சம் செலவு செய்து தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்க உள்ளோம் என்று தெரிவித்தனர். கொங்கு மண்டலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றிக்காக நாம் பயணிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் கை காண்பிக்கும் நபர்கள் தான் எம்எல்ஏக்களாக வருவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தேமுதிக-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை…அமைச்சர் எ.வ.வேலு அளித்த புதிய விளக்கம்!

Related Stories
150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..
லெஜெண்ட் சரவணனின் புதிய படம்.. வெளியான லீடர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சென்னையில் தீவிரமாக பரவும் பறவைக் காய்ச்சல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மோடிஜி என் சகோதரனை மீட்டுத்தாருங்கள் - நடிகை ஜெலினா ஜெட்லி கண்ணீர் மல்க உருக்கம்