Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முதலில் 40 இப்போது சரிபாதி.. ஒகே சொல்லுமா அதிமுக? கூட்டணி ஆட்சிக்கு அடிப்போடும் என்.டி.ஏ..

ADMK BJP Alliance: வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அதிமுகவிடம் சரி பாதி இடங்கள் கேட்க வேண்டும் என அண்ணாமலை யோசனை சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் 40 இப்போது சரிபாதி.. ஒகே சொல்லுமா அதிமுக?  கூட்டணி ஆட்சிக்கு அடிப்போடும் என்.டி.ஏ..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 15 Jun 2025 07:55 AM IST

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் (Assembly Election 2026) நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகள் தரப்பிலும் அதற்கான பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பூத் ஏஜெண்டுகள் அமைப்பது, தேர்தல் பொறுப்பாளர்கள், தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சு வார்த்தை என நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெறிக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக போன்ற கட்சிகள் பிரதானமாக உள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என எதிர்கட்சிகள் தரப்பில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக கூட்டணி அமைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலை அதிமுக பாஜக கூட்டணி அமைத்து சந்திக்க இருக்கும் நிலையில் பாஜக தரப்பில் அதிமுகவிடமிருந்து சரி பாதி இடங்கள் கேட்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வழியாக உள்ளது.

அதிமுக பாஜக கூட்டணி:


ஏப்ரல் 11 2025 அன்று உள்துறை அமைச்சர் தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிமுகவும் பாஜகவும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து சந்தித்தது. அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகள் கூட்டணி அமைத்தன.

ஆனால் சிறிது காலம் கழித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுகவினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில் கூட்டணியில் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலை இரு கட்சிகளும் தனித்தனியாக சந்தித்தனர். ஆனால் இரண்டு கட்சிகளும் ஒரு இடத்தை கூட ஒரு இடத்தில் கூட வெற்றி வெற்றி பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் அதிமுக மீண்டும் இடம்பெற்றுள்ளது. கூட்டணி அமைத்த நிலையில் தொகுதி பங்கீடுக்கான பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதலில் பாஜக தரப்பில் அதிமுகவிடம் 40 இடங்கள் கேட்கப்படுவதாக தகவல் வெளியானது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக இடம் 20 தொகுதிகளை பாஜக பெற்ற நிலையில் அதில் நான்கு தொகுதிகள் வெற்றி பெற்றது. கடந்த முறை நான்கு தொகுதிகள் வெற்றி பெற்ற நிலையில் முதலில் 40 தொகுதிகள் அதாவது இரண்டு மடங்கு அதிகரித்து இடங்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின.

சரிபாதி இடங்கள் கேட்கும் பாஜக:

ஆனால் தற்போது முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பிலிருந்து மதிய பாஜகவிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அதில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அதிமுகவிடம் இருந்து சரி பாதி இடங்கள் பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிமுக தரப்பில் 120 இடங்களில் போட்டியிட்டால் அதில் சரி பாதி 60 இடங்கள் கேட்டு பெற வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. சரி பாதி இடங்களை கேட்டுப் பெற்றால் மட்டுமே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க முடியும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி ஆட்சிக்கு அடிபோடும் பாஜக.. நோ சொல்லும் அதிமுக:

சமீபத்தில் மதுரைக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில் 2026 இல் பாஜக அதிமுக கூட்டணி ஆட்சி தான் அமையும் என உறுதியாக பேசினார். அதாவது தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என குறிப்பிட்டார். இது ஒரு பக்கம் இருக்க அதிமுக தரப்பில் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதாவது அதிமுக தமிழகத்தில் தனித்தே ஆட்சி அமைக்கும் என்றும் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை எனவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது