மு.க.ஸ்டாலின் ஐயா ஒரு கீ கொடுக்கும் பொம்மை.. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு!
Former BJP leader Annamalai: தமிழகத்தில் 5 ஆண்டு காலம் ஆட்சி செய்த மு.க.ஸ்டாலின் ஒரு கீ கொடுக்கும் பொம்மை என்றும், கட்சியினர் கீ கொடுத்தால் தமிழகத்த மத்திய அரசு வஞ்சிக்கிறது, ஹிந்தி, டெல்லி என்ற வார்த்தை மாறி மாறி பேசுவார் என்று அண்ணாமலை தெரவித்தார்.

மு.க.ஸ்டாலின் கீ கொடுக்கும் பொம்மை
தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: பாராளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி 131- ஆவது அரசியல் திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார். 2029 பாராளுமன்ற தேர்தலில் 33 சதவீத பெண்கள் பாராளுமன்றத்திற்கு செல்ல உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் 10 சதவீதத்துக்கும் கீழான பெண்களே சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில் பெண்கள் 50.8 சதவீதம் உள்ளனர். ஆனால், சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் அவர்களின் குரல் குறைவாகவே உள்ளது. எதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 33 சதவீத ஒதுக்கீடு எதற்காக என்பதை பிரதமர் மோடி விளக்கி உள்ளார்.
தமிழகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயரும்
ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் சட்ட திருத்த மாதிரிகளை தீயிட்டு கொளுத்தி உள்ளார். தமிழகத்தில் தற்போது 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், தொகுதி மறு வரை சட்டம் வந்த பிறகு 59 உறுப்பினர்களாக அதிகரிக்க உள்ளது. கேரளத்தில் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் தற்போது 30- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் 42- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, தென் மாநிலங்களில் 50 சதவீத பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: “காங்கிரஸை பற்றி பேச வேண்டாம்”.. நாங்கள் பேச ஆரம்பித்தால் உங்களுக்கு சங்கடம்.. சீமானுக்கு எச்சரிக்கை!!
மக்களவைக்கு அதிக பெண்கள் வர வேண்டும்
தமிழகம், கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்கள் சேர்ந்து பாராளுமன்றத்தில் 23.9 சதவீத உறுப்பினர்கள் உள்ளனர். இதன் மூலம் தென் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி என்ன குறை வைத்துள்ளார். பாராளுமன்றத்துக்கு அதிக அளவிலான பெண்கள் வரவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் எண்ணம் ஆகும். இந்த சட்டத்தை எதற்காக எதிர்க்கிறோம் என்று கூட தெரியாமல் கருப்பு சட்டை அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். நாளை மாலை 4 மணியளவில் இந்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்கு பதிவு நடைபெற உள்ளது.
கீ கொடுக்கும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஸ்டாலினை பொருத்தவரை கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கீதா ஜீவன் ஆகிய அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்று எண்ணுகின்றனர். அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ராமச்சந்திரன் அவரது தந்தை திருநாவுக்கரசர் என்ற அடையாளத்துடன் மட்டுமே தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழகத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், திமுகவுக்கும் வாக்களிக்க தயாராக இல்லை என்று தெரிவித்தார். தமிழகத்தில் பொம்மை முதல்வர் ஆட்சி செய்கிறார். அவருக்கு கட்சியினர் கீ கொடுத்தால் டெல்லி, ஹிந்தி, தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள் என்ற வார்த்தையே மாறி மாறி பேசுவார் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தொகுதி மறுவரையறைக்கு எதிராக கைகோர்த்த முதல்வர் ஸ்டாலின் – ராகுல்.. நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டத் திட்டம்..