252 முறை தோல்வி… ரூ.1 கோடி டெபாசிட் இழப்பு.. சற்றும் தளராத வேட்பாளர்.. யார் அவர்!

Election king K Pathmarajan: தேர்தல் மன்னன் அழைக்கப்படும் கே. பத்மராஜன் என்பர் 252 தேர்தல்களில் போட்டியிட்டதுடன், சுமார் ரூ.1 கோடி வரை டெபாசிட் தொகை இழந்துள்ளார். எனது இறுதி மூச்சு உள்ளவரை தேர்தல்களில் போட்டியிடுவேன் என்று கே. பத்மராஜன் தெரிவித்துள்ளார்.

252 முறை தோல்வி... ரூ.1 கோடி டெபாசிட் இழப்பு.. சற்றும் தளராத வேட்பாளர்.. யார் அவர்!

தேர்தல் மன்னன் கே. பத்மராஜன்

Published: 

24 Mar 2026 07:06 AM

 IST

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரைச் சேர்ந்தவர் கே. பத்மராஜன். டயர் பழுது பார்க்கும் கடை நடத்தி வரும் இவர், தமிழக சட்டமன்ற தேர்தல் உள்பட நாட்டில் நடக்கும் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு உள்ளார். அதன்படி, கடந்த 1988- ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 252- ஆவது முறை பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டதுடன், அந்த தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளார். இதனால், அனைவரும் இவரை தேர்தல் மன்னன் என அழைத்து வருகின்றனர். இதன் காரணமாக, தேர்தல் மன்னன் என்ற கின்னஸ் சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும், இந்தியாவில் தேர்தல்களில் அதிக தோல்விகளை சந்தித்த வேட்பாளர் என்ற லிம்கா கின்னஸ் சாதனையை கே. பத்ம ராஜன் பெற்றுள்ளார். இவர், உள்ளாட்சி தேர்தல்கள் முதல் குடியரசு தலைவர் தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து, டெபாசிட் பணம் தாக்கல் செய்து தேர்தலை சந்தித்துள்ளார். ஆனால், எந்த தேர்தலிலும் அவர் வெற்றியும் பெற்றது கிடையாது.

ரூ.1 கோடி டெபாசிட் இழந்த வேட்பாளர்

டெபாசிட் பணமும் திரும்ப பெற்றது கிடையாது. இதன் மூலம், சுமார் ரூ.1 கோடி வரை தேர்தல்களில் டெபாசிட் பணம் இழந்ததாக கே. பத்மராஜன் கூறியுள்ளார். இதன் மூலம் தேர்தலில் வெற்றியை எதிர்பார்க்காமல், தோல்வியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தோல்வியடைவதில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார். அடுத்தடுத்து நடைபெறும் தேர்தல்களில் தோல்வியை சந்தித்தாலும் எனது இறுதி காலம் வரை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைவேன் என்று கூறினார். இதன் மூலம் இந்தியா முழுவதும் தேர்தல் மன்னன் என்று கே. பத்மராஜன் அழைக்கப்படுகிறார்.

மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல் 2026: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு

பெரிய பெரிய தலைவர்களை எதிர்த்து வேட்புமனு

மன்மோகன் சிங், வாஜ்பாய், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி என இந்தியாவின் அத்தனை பெரிய தலைவர்களையும் எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதில், தமிழகத்தில் கடந்த 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மேட்டூர் தொகுதியில் போட்டியிட்ட கே. பத்மராஜன் 6,273 வாக்குகள் பெற்றார். இதுவே எனது மிகப்பெரிய சாதனை என்று குறிப்பிட்டார். பொதுவாகவே தேர்தல் என்று வந்துவிட்டால் உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து வேட்புமனு தாக்கல் செய்வது, டெபாசிட் செலுத்துவது, பிரச்சாரம் செய்வது என பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள்.

தோல்வியே அடையாளமாக மாறியது

ஆனால், இவர்களுக்கு மாறாக தான் போட்டியிடும் தேர்தல்களில் தோல்வி மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தலை சந்திப்பது விசித்திரமாக உள்ளது. அதன்படியே, ஆரம்பத்தில் அவர் மீதான பார்வை வேறு விதமாக இருந்தாலும், தற்போது, இதுவும் ஒருவித சாதனை மற்றும் அடையாளம் என மாறிவிட்டது.

மேலும் படிக்க: இந்த 2 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. மற்ற பகுதிகளில் வெயில் கொளுத்தும்.. வானிலை அப்டேட்..

Follow Us
Related Stories
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கார் தடுத்து நிறுத்தம்.. தேர்தல் பறக்கும் படை திடீர் சோதனை.. முழு விவரம் என்ன!
எலுமிச்சை பழம் மூலம் வேட்பாளர் தேர்வு… புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸில் விசித்திரம்!
“அதிமுக கூட்டணி 210 இடங்களில் நிச்சயம் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்”.. இபிஎஸ் நம்பிக்கை!!
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு குறி.. அதிமுக-அமமுக இடையே கடும் போட்டி.. யார் வசம் செல்கிறது!
அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் அதிருப்தி.. கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் பேச்சுவார்த்தை புறக்கணிப்பு..
தேர்தல் நடத்தை விதிமீறல்… சேலம் தவெக மாவட்ட செயலர் மீது வழக்குப்பதிவு… முழு விவரம் என்ன!
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..