அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு… அடித்து ஆடும் எடப்பாடி பழனிசாமி!

NDA Alliance parties Cnstituencies: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டார். இதில், அந்தக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு... அடித்து ஆடும் எடப்பாடி பழனிசாமி!

தேஜ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்

Updated On: 

25 Mar 2026 15:26 PM

 IST

தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றியை மையமாக வைத்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. இந்த கட்சிகளுக்கான தொகுதிகள் கடந்த திங்கள்கிழமை (மார்ச் 23) ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, இந்த கட்சிகள் போட்டியிடக்கூடிய தொகுதிகள் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை ( மார்ச் 25) சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள எம். ஜி. ஆர். மாளிகையில் நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார்.

மேலும் படிக்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

அதன்படி, பாரதிய ஜனதா கட்சி போட்டியிடக்கூடிய தொகுதிகள் விவரம்:

  • மயிலாப்பூர்
  • தளி
  • மொடக்குறிச்சி
  • உதகமண்டலம்
  • அவினாசி (தனி)
  • திருப்பூர் தெற்கு
  • கோயம்புத்தூர் வடக்கு
  • கந்தர்வகோட்டை
  • புதுக்கோட்டை
  • திருப்பத்தூர்
  • மதுரை தெற்கு
  • சாத்தூர்
  • திருச்செந்தூர்
  • வாசுதேவநல்லூர்
  • ராதாபுரம்
  • நாகர்கோவில்
  • விளவங்கோடு
  • ஆவடி
  • திருவண்ணாமலை
  • தஞ்சாவூர்
  • திருவாரூர்
  • அறந்தாங்கி
  • மானாமதுரை
  • ராமநாதபுரம்
  • குளச்சல்
  • பத்மநாபபுரம்
  • ராசிபுரம் (தனி) ஆகிய 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்

  • சேலம் மேற்கு
  • தருமபுரி
  • பென்னாகரம்
  • விக்கிரவாண்டி
  • சோளிங்கர்
  • மயிலாடுதுறை
  • திருப்போரூர்
  • உத்திரமேரூர்
  • பென்னாகரம்
  • ஜெயங்கொண்டம்
  • போளூர்
  • செஞ்சி
  • விருதாச்சலம்
  • ரிஷிவந்தியம்
  • காட்டுமன்னார்கோவில்
  • கீழ்வேளூர்
  • பெரம்பூர்
  • சேலம் வடக்கு ஆகிய 18 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

  • பெரியகுளம்
  • மன்னார்குடி
  • நாங்குநேரி
  • திருவையாறு
  • திருப்பத்தூர்
  • காரைக்குடி
  • நாங்குநேரி
  • ஒட்டப்பிடாரம்
  • சைதாப்பேட்டை
  • மடத்துக்குளம்
  • பூந்தமல்லி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி

  • ஒட்டன்சத்திரம்
  • ஈரோடு மேற்கு
  • கும்பகோணம்
  • ராணிப்பேட்டை
  • கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இந்திய ஜனநாயக கட்சி

  • குன்னம்
  • பல்லாவரம் ஆகிய தொகுதிகள்.

புரட்சி பாரதம் கட்சி

  • கே. வி. குப்பம்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

  • ராஜபாளையம் தொகுதி

இதனை தவிர்த்து எஞ்சியுள்ள தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்று எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், அந்த கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வருகிற மார்ச் 30- ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியவுடன், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் ஒன்றாக வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க: அய்யா பாமக என்ற புதிய கட்சியை தொடங்கும் ராமதாஸ்.. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

Follow Us
துரந்தர் படத்தின் இயக்குநருக்கு கங்கனா ரணாவத் பாராட்டு
வழிவிட்ட பயணிகள் - தும்பிக்கையால் நன்றி சொன்ன யானை
ஒரு பிளம்பரின் ஆண்டு வருமானம் ரூ.18 லட்சம் - அதிர்ச்சியில் நெட்டிஷன்கள்
உங்கள் சோகங்களை கேட்க வேண்டுமா? கட்டணம் ரூ.1000 - மும்பையில் கவனம் ஈர்க்கும் நபர்