சட்டமன்ற தேர்தல் 2026 : தபால் வாக்கு – கூடுதலாக 5 துறைகள் சேர்ப்பு – யாரெல்லாம் தபால் ஓட்டு செலுத்தலாம்?

Postal Voting Expanded : தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தபால் வாக்குகள் செலுத்த கூடுதலாக 5 துறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

சட்டமன்ற தேர்தல் 2026 : தபால் வாக்கு - கூடுதலாக 5 துறைகள் சேர்ப்பு - யாரெல்லாம் தபால் ஓட்டு செலுத்தலாம்?

மாதிரி புகைப்படம்

Updated On: 

19 Mar 2026 18:23 PM

 IST

சென்னை, மார்ச் 19 :தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரூ.50,000க்கு மேல் உள்ள தொகையை கொண்டு செல்பவர்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே எடுத்து செல்லு அனுமதி அளிக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தபால் வாக்கு தமிழகத்தில் மேலும் 5 துறைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தபால் வாக்கு செலுத்த கூடுதலாக 5 துறைகள் சேர்ப்பு

தேர்தல் காலத்தில் பணியில் இருக்கும் வாக்காளர்கள், நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத நிலை இருக்கும். இதனையடுத்து அவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் சிறப்பு வசதி தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. ஏற்கனவே தபால் வாக்கு செலுத்த, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சரக்கு கப்பலில் பணியாற்றுபவர்கள், பிஎஸ்என்எல் ஊழியர்கள், சென்னை மெட்ரோ ரயில் பணியாளர்கள், தகவல் ஒளிபரப்பு துறை ஊழியர்கள், உணவு பாதுகாப்பு துறை, ஊடகத் துறையினர் போன்றோருக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க : இறுதியாகும் பாஜக – அதிமுக தொகுதி பங்கீடு.. மீண்டும் டெல்லி சென்ற இபிஎஸ்..!

இந்த நிலையில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக 5 துறைகளை இணைத்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன் படி இந்த ஆண்டு தேர்தல் ஆணையம் கூடுதலாக தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்கள், மின்சாரத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், சிறைத்துறை பணியாளர்கள், தீயணைப்பு துறை ஊழியர்கள் மற்றும் தெற்கு ரயில்வே பணியாளர்கள் ஆகியோர் தங்களுக்கு அன்றைய தினம் வேலை வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் தபால் வாக்கு மூலம் தங்கள் வாக்குகளை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : mano thangaraj Tamil Nadu Election: அடுத்தடுத்து வெற்றி… பத்மநாபபுரம் தொகுதியில் முத்திரை பதிப்பாரா டி.மனோ தங்கராஜ்!

இந்த சேவையின் மூலம் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் இறுக்க, பணியில் இருக்கும் ஊழியர்களும் வாக்குரிமையை உறுதி செய்ய போன்ற காரணங்களுக்காக இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்யும் முக்கிய துறைகளில் பணிபுரிபவர்கள் தேர்தல் நாளில் விடுமுறை பெற முடியாத சூழலில் இந்த தபால் வாக்கு வசதி மகவும் பயணுள்ளதாக இருக்கும். அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் நோக்கில் தேர்தல் ஆணையம் இத்தகைய முடிவெடுத்துள்ளது. மேலும் தேர்தல் நாளில் பணியாற்ற விருக்கும்  அனுமதி பெற்ற ஊடகத்தினரும் தபால் வாக்கு செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்