விஜய் படங்கள் போடக்கூடாது… தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் சார்பில் மனு – என்ன காரணம்?

Vijay Movies Controversy: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தவகெவின் விஜய்யின் படங்களை திரையரங்குகளில் திரையிடக் கூடாது என காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் படங்கள் போடக்கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் சார்பில் மனு - என்ன காரணம்?

விஜய்

Published: 

25 Mar 2026 15:24 PM

 IST

மதுரை, மார்ச் 25 : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் படங்களை திரையரங்களிலும் தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பக்கூடாது என காங்கிரஸ் கட்சியின் மதுரை தெற்கு பொறுப்பாளர் செய்யது பாபு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். விஜய்யின் தவெக முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கிறது. விஜய் ஏற்கனவே தமிழக மக்களிடையே பிரபல நடிகராக இருந்து வருகிறார். ஆளுங்கட்சியான திமுகவிற்கு எதிரான சக்கியாக தன்னை முன்னிறுத்தி வருகிறார். சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மற்ற கட்சிகள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர் அறிவிப்பு என பரபரப்பாக இயங்கி வருகின்றன. ஆனால் தவெக செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற எண்ணம் அந்த கட்சியினரிடையே இருந்து வருகிறது.

விஜய் படங்களை திரையிடுவதற்கு தடை விதிக்கக்கோரி மனு

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சசிகலாவின் அஇபுதமமுகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. முன்னதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தன்னை சந்தித்து பேசியிருந்ததாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். ஒரு பக்கம் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிவடைந்து தொகதிகள் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலர் பதவியில் இருந்து டி.செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ஒருவேளை ஆதவ் அர்ஜூனா பேசியிருந்த காரணத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மதுரை தெற்கு பகுதி பொறுப்பாளர் பாபு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் விஜய் படங்களை திரையரங்குகளிலும், தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்புவதை தடைசெய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் தேர்தலில் போட்டியிடவிருக்கும் நிலையில் அவரது படங்களை திரையிட்டால், மக்களிடையே அவருக்கு ஆதரவான மனநிலையை உருவாக்கும் என்பதால் அவர் கடிதம் எழுதியிருப்பார் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : ராமதாஸ் vs அன்புமணி.. மாம்பழ சின்னம் யாருக்கு? சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணை..

இதனையடுத்து பாபுவின் கடிதம் சமூக வலைதளங்களில் வெளியான நிைலயில் அது தவெகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய்யின் போல உதயநிதி ஸ்டாலின் படங்களையும் தொலைகாட்சிகளில் திரையிடக் கூடாது என தவெகவினர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Follow Us
துரந்தர் படத்தின் இயக்குநருக்கு கங்கனா ரணாவத் பாராட்டு
வழிவிட்ட பயணிகள் - தும்பிக்கையால் நன்றி சொன்ன யானை
ஒரு பிளம்பரின் ஆண்டு வருமானம் ரூ.18 லட்சம் - அதிர்ச்சியில் நெட்டிஷன்கள்
உங்கள் சோகங்களை கேட்க வேண்டுமா? கட்டணம் ரூ.1000 - மும்பையில் கவனம் ஈர்க்கும் நபர்