வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்.. 12 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு..

Congress Candidate List 2026 Assembly Election: காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், திமுகவுடன் கூட்டணி அமைத்த நிலையில் 30க்கும் மேற்பட்ட இடங்கள் கோரப்பட்டிருந்தாலும், 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் தொகுதி விபரங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்.. 12 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு..

கோப்பு புகைப்படம்

Published: 

03 Apr 2026 17:34 PM

 IST

சென்னை, ஏப்ரல் 3, 2026: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மேலூர் தொகுதியைத் தவிர்த்து, பிற 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், இன்றைய தினம் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், திமுகவுடன் கூட்டணி அமைத்த நிலையில் 30க்கும் மேற்பட்ட இடங்கள் கோரப்பட்டிருந்தாலும், 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் தொகுதி விபரங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்:

இந்த வேட்பாளர் பட்டியலில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 5 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: வெற்றி ஒன்றே இலக்கு, ஓய்வின்றி உழைக்கும் கழக செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள் – முதல்வர் ஸ்டாலின்..

• பொன்னேரி (தனி) தொகுதியில் துரை சந்திரசேகர்
• வேளச்சேரியில் அசான் மௌலானா
• ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் செல்வப்பெருந்தகை
• சோளிங்கரில் முனிரத்தினம்
• ஊத்தங்கரை (தனி) தொகுதியில் குப்புசாமி
• கிருஷ்ணகிரியில் செல்லகுமார்
• தென்காசியில் தமிழ்குமரன்
• ஆத்தூர் (தனி) தொகுதியில் அர்த்தநாரி
• ஈரோடு கிழக்கில் கோபிநாத் பழனியப்பன்
• உதகையில் ராமச்சந்திரன்
• கவுண்டம்பாளையத்தில் சூரியபிரகாஷ்
• சிங்காநல்லூரில் ஸ்ரீநிதி நாயுடு
• துறையூர் (தனி) தொகுதியில் விச்சு லெனின் பிரசாத்
• கடலூரில் ஏ.எஸ். சந்திரசேகரன்
• மயிலாடுதுறையில் ஜமால் யூனஸ் முகமது
• அறந்தாங்கியில் ராமச்சந்திரன்
• காரைக்குடியில் மாங்குடி
• உசிலம்பட்டியில் சரவணக்குமார்
• சிவகாசியில் கணேஷ்
• சென்னையில் அசோகன்
• திருவாடானையில் ராமகரு மாணிக்கம்
• ஸ்ரீவைகுண்டத்தில் ஊர்வசி அமிர்தராஜ்
• சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் சங்கர் கணேசன்
• அம்பாசமுத்திரத்தில் பி.பி. துரை
• நாங்குநேரியில் ரூபி மனோகரன்
• குளச்சலில் தாரகை உலகம்
• கோட்டையில் பிரவீன்
• கிளியூரில் ராஜேஷ் குமார்

மேலும் படிக்க: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி சீனிவாசன்.. வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்..

மதுரை மேலூர் தொகுதியில் மட்டும் வேட்பாளர் யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இன்று இரவு அல்லது நாளை காலை அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..