மெட்ரோ ரயிலில் பயணித்து வாக்குசேகரித்த முதல்வர் ஸ்டாலின்.. பயணிகளுடன் கலந்துரையாடி நெகிழ்ச்சி!!

CM Stalin Campaigns in Metro rail: இந்த பயணத்தின் போது, ரயிலில் இருந்த பயணிகளுடன் அவர் மிகவும் சகஜமாக உரையாடினார். குறிப்பாக, தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், அவை மக்களுக்குச் சென்றடைவது குறித்தும் பயணிகளிடம் கேட்டறிந்தார். முதலமைச்சரைத் தங்களுக்கு அருகிலேயே கண்ட பயணிகள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

மெட்ரோ ரயிலில் பயணித்து வாக்குசேகரித்த முதல்வர் ஸ்டாலின்.. பயணிகளுடன் கலந்துரையாடி நெகிழ்ச்சி!!

மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின்

Updated On: 

10 Apr 2026 12:13 PM

 IST

Tamilnadu Polls 2026: தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று மெட்ரோ ரயிலில் பயணத்து மக்களிடையே நேரடியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தல் நெருங்கும் வேளையில், பொதுமக்களின் அன்றாடப் பயணத்தோடு இணைந்து முதலமைச்சர் மேற்கொண்ட இந்த நேரடித் தொடர்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: விஜய் இல்லை என்றால் என்ன?.. அஜித்தை குறிவைக்கும் அதிமுக.. இபிஎஸ்-ன் புதிய ‘அட்டகாச பிளான்’ இதுதான்!

பயணிகளுடன் கலந்துரையாடிய முதல்வர்:

இதையொட்டி, அவர் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை வரை ரயிலில் பயணம் செய்தார். இந்த பயணத்தின் போது, ரயிலில் இருந்த பயணிகளுடன் அவர் மிகவும் சகஜமாக உரையாடினார். குறிப்பாக, தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், அவை மக்களுக்குச் சென்றடைவது குறித்தும் பயணிகளிடம் கேட்டறிந்தார். முதலமைச்சரைத் தங்களுக்கு அருகிலேயே கண்ட பயணிகள் மிகுந்த உற்சாகமடைந்தனர். மெட்ரோ ரயில் வளாகத்திலும், பயணத்தின் போதும் பல பயணிகள் அவருடன் கலந்துரையாடினர். இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அவருடன் ஆர்வமாக ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர்.

மெட்ரோ ரயில் குறித்து நெகிழ்ச்சி:

தொடர்ந்து, மெட்ரோ ரயில் குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில், மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம். துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்!

விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர்.

அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் – சிறுசேரி, கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி, மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்.

இதையும் படிக்க: தமிழக தேர்தல் “பிக்பாஸ்”.. 234 தொகுதிகள்.. 4,500 வேட்பாளர்கள்.. வெளியானது இறுதி வேட்பாளர் பட்டியல்!

விமான நிலையம் – கிளாம்பாக்கம், கோயம்பேடு – பட்டாபிராம், பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம், தாம்பரம் – கிண்டி, கலங்கரை விளக்கம் – உயர்நீதிமன்றம், சிறுசேரி – கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்! சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us
Related Stories
கொடுங்கையூரில் காலை 6 மணி முதல் மது விற்பனை.. பாமக வேட்பாளர் திலகபாமா கொடுத்த புகார்.. பாய்ந்த நடவடிக்கை..
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. தமிழகம் வரும் பிரதமர் மோடி, ராகுல் காந்தி.. பயணத்திட்டம் என்ன?
“நாங்களும் விஜய் ரசிகர்கள்தான்”.. ஆனால் அவர்.. பரபரப்பை கிளப்பிய திமுக அமைச்சர்..
‘ஜனநாயகன்’ படம் லீக்.. “உதயநிதியும், எல்.முருகனுமே காரணம்”.. ஆதவ் அர்ஜுனா பகீர் புகார்..
விஜய் எச்சரித்தும் அடங்காத ஆர்வம்.. மீண்டும் விபத்தில் முடிந்த பைக் ஃபாலோயிங்.. தவெக தொண்டர்களுக்கு நேர்ந்த கதி!
விஜய் வருகைக்கு க்ரீன் சிக்னல்: ஸ்தம்பிக்கப்போகும் கடலூர்.. உற்சாகத்தில் தவெக தொண்டர்கள்!
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?