AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘ஜனநாயகன்’ படம் லீக்.. “உதயநிதியும், எல்.முருகனுமே காரணம்”.. ஆதவ் அர்ஜுனா பகீர் புகார்..

'Jananayagan' Movie Leaked: திட்டமிட்டே இந்தப் படம் இணையதளத்தில் கசியவிடப்பட்டுள்ளது என்றும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திரைப்படப் பெட்டிகளைத் திருடிச் சென்றது போன்ற ஒரு நிலையைத் தற்போது டிஜிட்டல் முறையில் திமுக மற்றும் பாஜக அரசு செய்து வருவதாகவும் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.

‘ஜனநாயகன்’ படம் லீக்.. “உதயநிதியும், எல்.முருகனுமே காரணம்”.. ஆதவ் அர்ஜுனா பகீர் புகார்..
ஆதவ் அர்ஜுனா
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 10 Apr 2026 12:55 PM IST

Tamilnadu Polls 2026: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதில் நீடித்து வந்த சிக்கல்களுக்கு மத்தியில், நேற்று முழு திரைப்படமும் இணையதளத்தில் கசிந்தது சினிமா, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தவெகவின் தேர்தல் மேலாண்மை குழு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, இந்தத் திரைப்படத்தை முடக்கியதும், தற்போது இணையதளத்தில் கசியவிட்டதும் திமுக மற்றும் பாஜகவினரின் கூட்டுச் சதி” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க: மெட்ரோ ரயிலில் பயணித்து வாக்குசேகரித்த முதல்வர் ஸ்டாலின்.. பயணிகளுடன் கலந்துரையாடி நெகிழ்ச்சி!!

உதயநிதியும், எல்.முருகனுமே காரணம்:

இது குறித்துப் பேசிய ஆதவ் அர்ஜுனா, மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருமே இதற்குப் பின்னால் இருப்பதாக அவர் பகிரங்கமாகச் சாட்டியுள்ளார். திரைப்பட வெளியீட்டில் நடந்த நிகழ்வுகளை விவரித்த ஆதவ் அர்ஜுனா, உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி படத்தை வெளியிட உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே, மத்திய அரசு (பாஜக) தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுத் தடை வாங்கப்பட்டது. மத்திய அமைச்சர் எல்.முருகன், அதிமுகவுக்கு உதவும் நோக்கில் இந்தப் படத்தை முடக்கத் தீவிரமாகச் செயல்பட்டார்.

விஜய்க்கு நஷ்டத்தை ஏற்படுத்த திட்டம்:

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், எல்.முருகனும் இணைந்து ‘ஜனநாயகன்’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்ததாக குற்றஞ்சாட்டிய அவர், “திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு சாட்டிலைட் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தச் சாட்டிலைட் வசதிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. விஜய்க்குப் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தவும், அவரை மிரட்டவும் திட்டமிட்டே இந்தப் படம் இணையதளத்தில் கசியவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் காலத்து அரசியலுடன் ஒப்பீடு:

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திரைப்படப் பெட்டிகளைத் திருடிச் சென்றது போன்ற ஒரு நிலையைத் தற்போது டிஜிட்டல் முறையில் திமுக மற்றும் பாஜக அரசு செய்து வருவதாக ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். 1977-ல் எம்.ஜி.ஆருக்கு மக்கள் எப்படி ஆதரவு அளித்தார்களோ, அதேபோல விஜய்க்கு மக்கள் உரிய நீதியைத் தேர்தலின் மூலம் வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிக்க: விஜய் இல்லை என்றால் என்ன?.. அஜித்தை குறிவைக்கும் அதிமுக.. இபிஎஸ்-ன் புதிய ‘அட்டகாச பிளான்’ இதுதான்!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி:

விஜய்யின் பிரசாரங்களுக்குத் தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், 1977-க்குப் பிறகு தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை மக்கள் உருவாக்கப் போகிறார்கள் என்றும் அவர் கூறினார். வரும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராவார் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Follow Us