அனைத்து மாநிலங்களிலும் தாமரை மலரும்.. பாஜக செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா!
BJP Rule: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் முடிவில் அனைத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் எனவும், தாமரை மலரும் என வெளிப்படுத்துவதாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா தெரிவித்தார்.

கோப்புப்படம்
தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வருகிற மே 4- ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. இந்த நிலையில், 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று புதன்கிழமை ( ஏப்ரல் 29) வெளியானது. இதில், மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதாகவும், புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கப் போவதாகவும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சி தொடரும் எனவும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனவும் சில கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது
பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வெற்றி கழகம் சுமார் 40 தொகுதிகள் வரை மட்டுமே வெற்றி பெறும் எனவும், சில கருத்துக் கணிப்புகள் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேற்குவங்க மாநிலத்தில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. அந்த மாநிலத்தில் ஒவ்வொரு தேர்தலின்போது வன்முறை நிகழ்வு வழக்கமாக இருந்து வந்தது.
மேலும் படிக்க: தர்மபுரி காட்டில் பெண் சடலமாக மீட்பு: கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறிய பயங்கரம்.. இருவர் அதிரடி கைது!
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெரும் என கணிப்பு
கடந்த சட்டமன்ற தேர்தல்களின் போது ஏற்பட்ட வன்முறைகளால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்திருந்தனர். ஆனால், தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே வேளையில் வன்முறை சம்பவங்களும் குறைந்த அளவிலேயே நிகழ்ந்தன. இதற்கு, தலைமை தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய பாதுகாப்பு படையினருக்கும் உரிய நன்றியை தெரிவிக்க வேண்டும்.
அனைத்து பகுதிகளிலும் தாமரை மலரும்
தற்போது வெளியான 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் எனவும், தாமரை மலர்வதையும் வெளிப்படுத்தி உள்ளது. தற்போது, அசாம் மாநிலத்தில் 3- ஆவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க போகிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறது. புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதே போல, மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என செஷாத் பூனாவாலா தெரிவித்தார்.
மேலும் படிக்க: கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. “விசில் புரட்சி வெடிக்கப்போகுது”.. செங்கோட்டையன் அதிரடி