நம் ஓட்டு நம் உரிமை.. வாட்ஸ் ஆப் வழியாக வீடு தேடி வரும் தேர்தல் விழிப்புணர்வு.. தேர்தல் ஆணையம் மாஸ் பிளான்!

Tamil Nadu 100% voting Awareness: தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் வாட்ஸ் ஆப் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த விழிப்புணர்வில் நாம் அனைவரும் தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

நம் ஓட்டு நம் உரிமை.. வாட்ஸ் ஆப் வழியாக வீடு தேடி வரும் தேர்தல் விழிப்புணர்வு.. தேர்தல் ஆணையம் மாஸ் பிளான்!

வாட்ஸ் ஆப்பில் 100 % வாக்குப்பதிவு விழிப்புணர்வு

Published: 

15 Apr 2026 08:38 AM

 IST

தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி தமிழகம் தவிர்த்து பிற 3 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், 3 மாநிலங்களில் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்திருந்தது. இதே போல, புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் 91.23 சதவீதம் வாக்குகள் பதிவாகி புதிய வரலாற்றை படைத்தது. இதே போல, தமிழகத்திலும் கூடுதல் வாக்குகள் பதிவாக வாக்கு சதவீதம் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, தேர்தல் ஆணையம் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

வாட்ஸ ஆப்பில் விழிப்புணர்வு குறுஞ்செய்தி

அந்த வகையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து சென்னை மாவட்டத்தில் சுமார் 11.50 லட்சம் வாக்காளர்களுக்கு ஏப்ரல் 23- ஆம் தேதி நாம் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்வோம் என்ற வாசகத்துடன் வாட்ஸ் ஆப்பில் விழிப்புணர்வு செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. இதே போல, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: திருப்பூரில் விஜய்யின் பரப்புரை.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த 14 பேர்..

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியறுத்தி…

இதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தேர்தல் விழிப்புணர்வு குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அந்த குறுஞ்செய்தியில் தேர்தல் தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இணையதள முகவரி குறித்த தகவல் ஆங்கிலம் மற்றும் தமிழில் இடம் பெற்றுள்ளது. வாக்காளர்களுக்கு அனுப்பப்பட்டு வரும் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தியில் வருகிற ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதே உறுதி செய்வோம்.

வாட்ஸ் ஆப் செய்தியில் குறிப்பிட்டுள்ள தகவல்

தேர்தல் நடைபெறும் விடுமுறை நாளில் நாம் அனைவரும் வாக்குச்சாவடிக்கு தவறாமல் சென்று வாக்களித்து நமது உரிமையினை நாட்டிடுவோம். வாக்காளர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். மேலும் விவரங்களுக்கு https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் ஒரு ஜனநாயக திருவிழாவாக கொண்டாடி வருகிறது. இதில், வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், வாட்ஸ் ஆப்பில் தேர்தல் தொடர்பான குறுஞ் செய்திகளை அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பிரதமரை மிரட்டும் தொனியில் பேசுவதா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்..

Follow Us
Related Stories
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்