பாமக போட்டியிடும் 18 சட்டமன்ற தொகுதிகள்… வெளியானது உத்தேச பட்டியல்!

Pmk Contest Constituencies : தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 18 உத்தேச சட்டமன்ற தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், எந்தெந்த தொகுதிகள் இடம் பெற்றுள்ளன என்பன குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பாமக போட்டியிடும் 18 சட்டமன்ற தொகுதிகள்... வெளியானது உத்தேச பட்டியல்!

பாமக போட்டியிடும் உத்தேச தொகுதிகள் பட்டியல்

Updated On: 

24 Mar 2026 12:23 PM

 IST

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பாதீய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி (அன்புமணி தரப்பு), அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுக்கு நேற்று திங்கள்கிழமை (மார்ச் 23) சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதி பங்கீடு இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஒவ்வொரு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அந்த கட்சி சார்பில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான உத்தேச பட்டியலை கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். இதில்,

  • பாப்பிரெட்டிப்பட்டி
  • பென்னாகரம்
  • தர்மபுரி
  • அந்தியூர்
  • ஓமலூர்
  • சங்ககிரி
  • விக்கிரவாண்டி
  • செய்யாறு
  • ஜெயங்கொண்டம்
  • மயிலம்
  • நெய்வேலி
  • மேட்டூர்
  • புவனகிரி
  • விருத்தாச்சலம்
  • சோளிங்கர்
  • கும்மிடிப்பூண்டி
  • விழுப்புரம்
  • குன்னம்
  • ஆற்காடு
  • திருவள்ளூர்
  • பாலக்கோடு
  • திருத்தணி
  • செஞ்சி
  • திண்டிவனம் அல்லது அரூர்
  • வானூர் அல்லது காட்டுமன்னார்கோவில்

ஆகிய 25 சட்டமன்ற தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்ப பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதற்காகன பட்டியலை அதிமுக தலைமையிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி சமர்ப்பிக்க உள்ளார். அதன் அடிப்படையில், பேச்சுவார்த்தையின் மூலமாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடக்கூடிய தொகுதிகள் இறுதி செய்யப்படும். பாட்டாளி மக்கள் கட்சியில் 35 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக குறைந்த தொகுதியில் போட்டியிடுவது இந்த தேர்தலே ஆகும். தற்போது வெளியாகி உள்ள உத்தேச பட்டியலின் அடிப்படையில் வட மாவட்டங்களில் தான் பாட்டாளி மக்கள் கட்சி அதிகமாக போட்டியிட வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் தான், பாட்டாளி மக்கள் கட்சி இரு பிரிவாக பிரிந்து தேர்தலை சந்திக்கிறது.

( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)

Follow Us
மாலத்தீவில் நடைபெற்ற படகு விபத்து ரேமண்ட் தலைவர் கௌதம் சிங்கானியா விபத்தில் காயம்
இந்திய பெருங்கடல் வரை பரவிய ஈரான் - இஸ்ரேல் போர்? அதிர்ச்சி தகவல்
மகளுக்காக பறவையைக் கொன்ற தந்தை - 8 மாத சிறை தண்டனை
அரபிக்கடலில் அனு ஆயுதம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்திய பிரட்டன் - பரபரப்பு தகவல்