வயிற்றெரிச்சல் மனிதர்கள்.. செங்கோட்டையன் மீது RB உதயகுமார் விமர்சனம்!

RB Udhayakumar: அதிமுகவில் எழுந்துள்ள ஒருங்கிணைப்புப் பிரச்சனை குறித்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனத்துடன் கூடிய வீடியோ வெளியிட்டுள்ளார். செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்து, கட்சி ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திய நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

வயிற்றெரிச்சல் மனிதர்கள்.. செங்கோட்டையன் மீது RB உதயகுமார் விமர்சனம்!

ஆர்.பி.உதயகுமார் - செங்கோட்டையன்

Updated On: 

10 Sep 2025 18:18 PM

 IST

மதுரை, செப்டம்பர் 10: அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக விவாதம் எழுந்துள்ள நிலையில் அக்கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் காட்டமான விமர்சனத்தோடு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் 10 நாட்கள் கெடு விதித்துள்ளார். இதனிடையே பதிலடியாக செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக செங்கோட்டையனுக்கு ஓ.பன்னீர்செல்வம்,சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

‘ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பான வாதத்தை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாஜக கூட்டணியில் ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்தி விட முடியாதா என சிலர் நினைக்கிறார்கள். அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது,  பல்வேறு பிரிவுகள் இருக்கிறது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி எடப்பாடி பழனிச்சாமிக்கு பெருகி வருகின்ற செல்வாக்கை திசை திருப்பிக் வகையில் ஆளுகிற கட்சி ஒருபுறத்தில் செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: AIADMK: கட்சியை உடைக்க பார்க்கின்றனர்.. செங்கோட்டையனுக்கு இபிஎஸ் பதிலடி!

அதற்கு இறையாகிற ஒரு நிலையை நாம் பார்க்கிறபோது ஒவ்வொரு அதிமுக தொண்டனும் வேதனையில் நெருப்பில் விழுந்த புழுவாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி லட்சியத்தோடு நம்மை அழைத்துச் செல்வதை கண்டு ஒரு சில பேருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது.  தங்களுடைய இயலாமையினால் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்ற அந்த பொறாமை தீயினால் தங்களை தாங்களே தடம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  அதிமுகவில் ஒற்றுமை என்ற பெயரை வைத்துக் கொண்டு அக்கட்சிக்கு விண்ணளவு உயர்ந்து கொண்டிருக்கிற செல்வாக்கை ஒரு பின்னடைவை ஏற்படுத்தி விடலாம் என கனவு காண்கிற அந்த வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு எல்லாம் தோல்வியை தான் ஜெயலலிதாவின் ஆன்மா, தமிழ்நாட்டு மக்கள் அளிப்பார்கள்.

இதையும் படிங்க: ’செங்கோட்டையனுக்கு தான் சப்போர்ட்.. விரைவில் சந்திப்பேன்’ உறுதியாக சொன்ன ஓபிஎஸ்!

பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பற்றிய பயணம் வெளியாகும் நிலையில் அதனை மடைமாற்றும் விதமாக வயிற்றெரிச்சல் மனிதர்கள் எல்லாம், இங்கே சென்றார்கள் அங்கே சென்றார்கள், அவரை (அமித்ஷா) சந்தித்தார்கள், எதற்கு சந்தித்தார்கள்?,  அவர்தான் இங்கேயே வந்து எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் விருந்து சாப்பிட்டுவிட்டு ஜெயலலிதாவின் ஆட்சி மலர்வதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளார். இந்த கூட்டணியில் நாம்   வலிமையை பசைச்சாற்றி வெற்றி பயணத்தில்  சென்று கொண்டிருக்கிறோம். இதனை பொறுத்துக் கொள்ள முடியும் முடியாத வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு அதிமுக தொண்டர்கள் தங்கள் உழைப்பின் மூலமாக பதில் சொல்வார்கள். அதைவிட வேறு என்ன பதிலளிக்க முடியும்?” என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.