அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி- தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா வேட்பு மனு தாக்கல்..!

EPS And Premalatha Nomination File: தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி தேதியான இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தாங்கள் போட்டியிடக்கூடிய தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி- தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா வேட்பு மனு தாக்கல்..!

எடப்பாடி- பிரேமலதா வேட்பு மனு தாக்கல்

Published: 

06 Apr 2026 14:35 PM

 IST

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சியினர் திவீர பணியாற்றி வருகின்றனர். தேர்தலையொட்டி, கடந்த மார்ச் 30- ஆம் தேதி ( திங்கள்கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளிலேயே திமுக தலைவரும், முதல்வருமான மு. க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் கடைசி தேதியான இன்று ஏப்ரல் 6 ( திங்கள்கிழமை) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தான் போட்டியிடக்கூடிய எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பிரேமலதா விஜயகாந்த் வேட்பு மனு தாக்கல்

இதே போல, கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன்படி, அவர் இன்று பிற்பகல் விருதாச்சலம்- கடலூர் சாலையில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணு பிரியாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதேபோல, மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

மேலும் படிக்க: அரசு பேருந்தில் விஜய்யின் தவெக பெயர் – ஹேக் செய்யப்பட்டதா? போக்குவரத்துறை விளக்கம்

நாளை வேட்பு மனு பரிசீலனை

அதன்படி, தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து, நாளை ஏப்ரல் 7- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) வேட்பு மனு பரிசீலனை நடைபெற உள்ளது. இதில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும். தகுதி இல்லாத அல்லாத  தாக்கல் செய்த வேட்பு மனுவில் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத அல்லது வேட்பாளர்களில் யாரேனும் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டால் அவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும்.

ஏப்ரல் 9- இல் வேட்பாளர்கள் இறுதி பட்டியல்

இதில், தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்படுவதுடன், அந்த வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஏப்ரல் 9- ஆம் தேதி ஆகும். அன்றைய தினமே வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதில், வேட்பு மனு நிராகரிக்கப்படும் போது, அவர்களின் டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும்.

மேலும் படிக்க: புதுச்சேரியில் பெண்களுக்கு இலவச பேருந்து, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.2000 – ராகுல் காந்தி அறிவிப்பு

Follow Us
Related Stories
சிதம்பரம் அருகே திடீரென உள்வாங்கிய மேம்பாலம்.. நள்ளிரவில் பொது மக்கள் பதறியடித்து ஓட்டம்!
Singanallur Constituency Election 2026: கோவையில் அமைந்திருக்கும் சிங்காநல்லூர் தொகுதி.. திமுக vs அதிமுக.. யாருக்கு வெற்றி வாய்ப்பு?
திருமாவளவனுக்கு திமுக கூட்டணி அளித்த சிறப்பான பரிசு… எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
புதுச்சேரியில் பெண்களுக்கு இலவச பேருந்து, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.2000 – ராகுல் காந்தி அறிவிப்பு
இறுதிகட்டத்தில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: அமித் ஷா, ராகுல் காந்தி இன்று வருகை.. பரபரப்பாகும் அரசியல் களம்
ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் திடீர் மாற்றம் – மனு தாக்கல் செய்யும் ஆர்.காந்தி
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்