நாளை நடக்கும் ஜனநாயக திருவிழா.. தலைமை செயலகத்தில் உயர் சிறப்பு கட்டுப்பாட்டு அறை..
மாநிலம் முழுவதும் 100% வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட செல்லுபடியாகும் ஆவணங்களுடன் வாக்களிக்க தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” என்ற வாசகத்துடன், தேர்தலை அமைதியாகவும் வெளிப்படையாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 22, 2026: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி காலை 7.00 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் சிறப்பு தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்த இடையூறும் இன்றி நடைபெறுவதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் VVPAT கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மாற்று இயந்திரங்கள் பயன்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒரே கட்டத்தில் நடக்கும் வாக்குப்பதிவு:
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 4000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நான்கு முக்கிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊடகக் கண்காணிப்பு, cVIGIL புகார் பராமரிப்பு, 24 மணி நேர தொடர்பு மையம் மற்றும் மைய கட்டுப்பாட்டு அறை ஆகியவை மூலம் முழுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க: நாளை வாக்குப்பதிவு.. மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் கடிதம்..
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவிகள் பாதுகாப்பாக வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நேரடி இணைய ஒளிபரப்பு (webcasting) ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
100% வாக்குப்பதிவு உறுதி செய்ய வேண்டும்:
மேலும், மாநிலம் முழுவதும் 100% வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட செல்லுபடியாகும் ஆவணங்களுடன் வாக்களிக்க தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ரூ.1,000 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் பரபரப்பு தகவல்
“தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” என்ற வாசகத்துடன், தேர்தலை அமைதியாகவும் வெளிப்படையாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.