இனி ஏடிஎம், யுபிஐ மூலமே பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.. புதிய அம்சம் இன்று முதல் அமல்!

Users Can Withdraw PF Money Through UPI and ATM | முன்னதாக பிஎஃப் பணத்தை பெற ஊழியர்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்த நிலையில், தற்போது ஏடிஎம் மற்றும் யுபிஐ செயலிகள் மூலம் மிக விரைவில் எடுத்துக்கொள்ளும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இனி ஏடிஎம், யுபிஐ மூலமே பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.. புதிய அம்சம் இன்று முதல் அமல்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

01 Mar 2026 22:43 PM

 IST

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் (EPFO – Employee Provident Fund Organization) மூலம் ஊழியர்களுக்கு பல்வேறு சிறப்பு பலன்கள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், ஊழியர்களுக்கான மற்றொரு அசத்தல் அம்சத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, பிஎஃப் (PF – Provident Fund) பணத்தை ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையங்கள் மற்றும் யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் எடுத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம்  செய்துள்ளது. இந்த சிறப்பு அம்சம் இன்று (மார்ச் 1, 2026) முதல் அமலுக்கு வந்துள்ளது. இபிஎஃப்ஓவின் இந்த அட்டகாசமான அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இபிஎஃப்ஓ அறிமுகம் செய்த அசத்தல் அம்சம்

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் துறை ஊழியர்களுக்கான அசத்தல் திட்டமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அது ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது தேவைகளுக்காக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : மைக்ரோ SIP.. தினமும் வெறும் ரூ.10 முதலீட்டை தொடங்கலாம்.. தெரிஞ்சுக்கோங்க!

ஏடிஎம், யுபிஐ மூலம் சுலபமாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம்

முன்னதாக பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளத்திற்கு சென்று விண்ணப்பித்து, அனுமதி பெற்று, அந்த பணம் வங்கி கணக்கிற்கு வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது அவற்றுக்கெல்லாம் கவலை இல்லை. காரணம், பிஎஃப் பணத்தை மிக எளிமையான முறையில் எடுத்துக்கொள்ளும் அம்சத்தை இபிஎஃப்ஓ அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : உங்களுக்கே தெரியாமல் உங்கள் பான் கார்டை பயன்படுத்தி கடன் வாங்கலாம்.. கவனமாக இருப்பது எப்படி?

அதாவது பிஎஃப் பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ செயலிகள் மூலமே எடுத்துக்கொள்ளும் அம்சத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் முன்பு போல ஊழியர்கள் பிஎஃப் பணத்துக்காக விண்ணப்பித்து அதற்காக காத்திருக்க வேண்டிய சூழல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி