UPI : யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்கிறீர்களா?.. வருகிறது புதிய ரூல்ஸ்.. என்ன தெரியுமா?

SMS For Transaction Under 100 May Stop | யுபிஐ பண பரிவர்த்தனை பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் ரூ.1-ல் இருந்து யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் தான் அது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

UPI : யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்கிறீர்களா?.. வருகிறது புதிய ரூல்ஸ்.. என்ன தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Updated On: 

17 Oct 2025 15:15 PM

 IST

இந்திய மக்களிடையே யுபிஐ (UPI – Unified Payment Interface) சேவை மிகவும் பிரபலமாக உள்ளது. ஏராளமான பொதுமக்கள் தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை யுபிஐ மூலம் மேற்கொள்கின்றனர். யுபிஐ பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payment Corporation of India) அதில் பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் யுபிஐ-ல் முக்கிய மாற்றம் ஒன்றை கொண்டுவர இந்திய ரிசர்வ் வங்கியிடம் (RBI – Reserve Bank of India) அனுமதி கோரப்பட்டுள்ளது. அது என்ன மாற்றம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அன்றாட பண பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ பயன்படுத்தும் பொதுமக்கள்

தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் யாரும் கையில் பணம் வைத்து செலவு செய்வதில்லை. அனைவரும் யுபிஐ மூலம் தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். அதாவது ரூ.10 முதல் ஆயிரங்கள் வரை தங்களது அனைத்து தேவைகளுக்கும் யுபிஐ பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்தியாவின் பெரிய நகரங்கள் முதல் கடைகோடி கிராமங்கள் வரையும், சிறிய பெட்டிக் கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரையும் என அனைத்து இடங்களிலும் இந்த யுபிஐ சேவை பயன்படுத்தப்படுவதால் அதன் மூலம் பண பரிவர்த்தனை செய்வது பொதுமக்களுக்கு மிகவும் சுலபமாக உள்ளது.

இதையும் படிங்க : PPF : வெறும் ரூ.12,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.40 லட்சம் பெறலாம்.. எப்படி?

ரூ.100-க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு குறுஞ்செய்திகளை நிறுத்த கோரிக்கை

பொதுவாக வங்கி கணக்கில் ஏதேனும் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் அது தொடர்பான அறிவிப்புகள் அந்த வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். முன்னதாக பொதுமக்கள் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களை மட்டுமே பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்து வந்த நிலையில், அது சிறந்ததாக இருந்தது. ஆனால், தற்போது பொதுமக்கள் அதிகமாக யுபிஐ பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.

இதையும் படிங்க : Silver Price : சரசரவென உயரும் வெள்ளி விலை.. முதலீடு செய்வது சிறந்ததா?

பொதுமக்கள் ரூ.1-ல் இருந்தே யுபிஐ மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். அதற்கான குறுஞ்செய்திகளும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அனைத்து யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கும் குறுஞ்செய்தி வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் முக்கிய தகவல்களை தவற விடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரூ.100-க்கும் குறைவான பண பரிவர்த்தனைகளுக்கான குறுஞ்செய்தியை நிறுத்த இந்திய ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தில் பயனர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் இதனை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அதாவது, வாடிக்கையாளர்களின் விருப்பப்படி அவர்கள் ரூ.100-க்கும் குறைவாக மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகளுக்கு குறுஞ்செய்தி பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.