Income Tax : குடிமக்களிடம் வருமான வரி வசூலிக்காத நாடுகள்.. பட்டியல் இதோ!
Countries Without Income Tax | இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு வருமான வரி விதிக்கப்படுகிறது. அதன் காரணமாக அவர்கள் தாங்கள் ஈட்டும் வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும். ஆனால், சில உலக நாடுகள் தங்களது பொதுமக்களிடம் வருமான வரி வசூலிப்பதில்லை.

இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டினால் அந்த நபர் வருமான வரி (Income Tax) செலுத்த வேண்டும். அவ்வாறு அந்த நபர் வருமான வரி செலுத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் வருமான வரி இவ்வளவு கடுமையாக உள்ளதை போலவே அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் வருமான வரி விதிக்கப்படுகிறது. ஆனால், இந்த வருமான வரி சதவீதம் ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஏற்ப மாறுபடும். இவ்வாறு பல உலக நாடுகளில் வருமான வரி விதிக்கப்படும் நிலையில், சில நாடுகள் தங்களின் குடிமக்களுக்கு வருமான வரி விதிப்பதில்லை. அவை எவை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஐக்கிய அரபு அமீரகம்
வருமான வரி விதிக்காத நாடுகளில் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பது ஐக்கிய அரபு அமீரகம் தான். இந்த நாட்டின் குடிமக்களிடம் அந்த நாட்டு அரசு வருமான வரி வசூல் செய்வதில்லை. அதற்கு பதிலாக அங்கு VAT (Value Added Tax) உள்ளிட்ட பிற கட்டணம் முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுலா மற்றும் எண்ணெய் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. இதன் காரணமாக அது பொருளாதாரத்திலும் உயர்ந்த நிலையில் உள்ளது. எனவே தான் பெரும்பாலான பொதுமக்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்கு செல்ல விரும்புகின்றனர்.
சவுதி அரேபியா மற்றும் கத்தார்
பட்டியலில் அடுத்தபடியாக உள்ள நாடுகள் சவுதி அரேபியா மற்றும் கத்தார். இந்த நாடுகளில் வரி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த நாடுகளில் வசிக்கும் பொதுமக்கள் தாங்கள் ஈட்டும் வருமானத்தில் இருந்து ஒரு சதவீதம் கூட அரசுக்கு வரியாக செலுத்த வேண்டிய தேவையில்லை. ஆனால், ஒருசில மறைமுக வரிகள் இந்த நாடுகளில் பின்பற்றப்படுகின்றன.




பஹ்ரைன் மற்றும் குவைத்
பொதுமக்களிடம் வரி வசூலிக்காத நாடுகளின் பட்டியலில் பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் உள்ளன. பஹ்ரைன் அரசாங்கம் தனது பொதுமக்களிடம் இருந்து எந்தவிதமான வரியும் வசூலிக்கவில்லை. இதன் காரணமாக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து பொதுமக்கள் வரி செலுத்த தேவையில்லை. இதேபோலவே குவைத்திலும் தனி நபர் வருமானத்திற்கு அரசு வரி வசூலிப்பதில்லை.
இதையும் படிங்க : லோனை முன்கூட்டியே அடைத்தால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்குமா? உண்மை என்ன?
பஹாமஸ்
உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தளமான பஹாமஸ், சுற்றுலா பயணிகளுக்கான சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு வாழும் குடிமக்களுக்கு எந்த விதமான தனிநபர் வருமான வரியும் அந்த நாட்டு அரசு விதிப்பதில்லை.
மொனாக்கோ
ஐரோப்பா நாடானா மொனாக்கோவில் பொதுமக்களிடம் இருந்து அரசு எந்த விதமான தனிநபர் வருமான வரியையும் விதிப்பதில்லை.
புருனே
எண்ணெய் வளம் கொண்ட நாடான தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள புருனேவில் பொதுமக்களுக்கு எந்த விதமான வரியும் விதிக்கப்படுவதில்லை.
நவ்ரு
உலகின் மிகச் சிறிய தீவு நாடான நவ்ருவில் பொதுமக்களிடம் இருந்து எந்த விதமான வருமான வரியும் விதிக்கப்படுவதில்லை.