Silver : வெள்ளியில் முதலீடு செய்யுங்கள்.. Rich Dad Poor Dad எழுத்தாளர் ராபர்ட் கியோசகி அறிவுரை!

Robert Kiyosaki Predicts Silver Prediction | உலகமே தங்கத்தில் முதலீடு செய்துக்கொண்டு இருக்கும் சூழலில் வெள்ளியில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும் என்று ரிச் டாட் பூர் டாட் ஆசிரியர் ராபர்ட் கியோசகி கூறியுள்ளார். மேலும் ஜூலை மாதத்தில் வெள்ளி விலை அபார உயர்வு அடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Silver : வெள்ளியில் முதலீடு செய்யுங்கள்.. Rich Dad Poor Dad எழுத்தாளர் ராபர்ட் கியோசகி அறிவுரை!

ராபர்ட் கியோசகி

Updated On: 

29 Jun 2025 13:05 PM

உலக அளவில் தங்கம் விலை (Gold Price) மிக வேகமாக உயர்ந்து வருகிறது. தங்கம் விலை எவ்வளவு வேகமாக உயருகிறதோ அதே வேகத்தில் வெள்ளி விலையும் (Silver Price) உயருகிறது. ஆனால், பெரும்பாலான பொதுமக்கள் தங்கம் விலை உயர்ந்துக்கொண்டே செல்வதால் அதனை வாங்கி சேமிக்க முனைப்பு காட்டுகின்றனர். இந்த நிலையில், ரிச் டாட் பூர் டாட் ஆசிரியர் ராபர்ட் கியோசகி (Rich Dad Poor Dad Author Robert Kiyosaki) வெள்ளியில் முதலீடு செய்ய கூறுகிறார். வெள்ளி விலை இன்னும் சில நாட்களில் உச்சத்தை தொட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், வெள்ளியில் முதலீடு செய்வது குறித்து ராபர்ட் கியோசகி கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கத்திற்கு ஈடு கொடுத்து உயரும் வெள்ளி விலை

உலக அளவில் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. கடந்த காலங்களில் தங்கத்தில் முதலீடு செய்ததன் மூலம் பெரிய நிதி இழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், அதிக லாபம் தரும் முதலீடாகவும் தங்கம் இருப்பதனால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். அதுமட்டுமன்றி, உலகில் எப்போதெல்லாம் அசாதாரணமாக சூழல் நிலவுகிறதோ அப்போதெல்லாம் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பிவிடும். இவ்வாறு எப்போது லாபம் தரும் முதலீடாக தங்கம் உள்ள நிலையில், பொதுமக்களின் கவனம் தங்கத்தின் மீது முதலீடு செய்வதில் உள்ளது.

இதற்கிடையே தங்கம் விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை வரலாறு காணாதா உச்சத்தை எட்டி வருகிறது. தறோதைய நிலவரப்படி தங்கம் ஒரு கிராம் ரூ.10,000-த்தை நெருங்கும் நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டலாம் என்ற அச்சத்தில் பெரும்பாலான மக்கள் தங்கத்தில் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில், தங்கத்தை போலவே வெள்ளியும் சிறந்த முதலீடாக இருக்கும் என பொருளாதார வல்லுநரும், ரிச் டாட் பூர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசகி கூறியுள்ளார்.

வெள்ளி குறித்த ராபர்ட் கியோசகியின் எக்ஸ் பதிவு

வெள்ளியில் முதலீடு செய்வது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராபர்ட் கியோசகி, நீங்கள் வாங்கும்போதுதான் உங்களுக்கு லாபம், விற்பனை செய்யும்போது அல்ல. இன்றைய காலக்கட்டத்தில் வெள்ளி சிறந்த முதலீடாக உள்ளது. அதாவது வெள்ளி விலை உயர அதிக வாய்ப்பு உள்ளது, குறைய மிக குறைந்த வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், ஜூலை மாதத்தில் வெள்ளி விலை உச்சத்தை தொடும் என்றும், எல்லாராலும் இப்போது வெள்ளி வாங்க முடியும் ஆனால் எதிர்காலத்தில் வாங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.