AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold : தூய்மையான மற்றும் குறைந்த விலையில் தங்கம் வாங்க இந்தியாவின் டாப் 5 சிட்டிகள்!

Best Cities in India to Buy Gold | தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை காரணமாக பல்வேறு இடங்களில் போலி தங்கத்தின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தூய்மையான மற்றும் குறைந்த விலையில் தங்கம் விற்பனை செய்யப்படும் இந்தியாவின் டாப் 5 நகரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold : தூய்மையான மற்றும் குறைந்த விலையில் தங்கம் வாங்க இந்தியாவின் டாப் 5 சிட்டிகள்!
தங்க நகை
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Jun 2025 11:58 AM IST

தங்கம் (Gold) ஒரு உலோகமாக மட்டும் பார்க்கப்படாமல் அது முதலீடாக (Investment) கருதப்படுகிறது. இந்தியாவை பொருத்தவரை தங்கம் பாரம்பரியத்துடன் இணைந்துள்ளது. ஏதேனும் சுப காரியங்கள் நடக்கும்போது ஒரு குண்டு மணி அளவிலாவது தங்கம் வைப்பதை இந்தியர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதுதவிர இந்திய பெண்களின் வாழ்க்கையில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு பல தேவைகளுக்கு, பல இடங்களில் தங்கம் முதன்மையாக உள்ள நிலையில், அந்த தங்கம் தரமானதாக இருக்க வேண்டும் என அனைவரும் எதிர்ப்பார்ப்பது வழக்கம். ஆனால், தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசி காரணமாக போலி தங்கத்தின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் எந்த பகுதிகளில் தூய்மையான மற்றும் குறைந்த விலையில் தங்கத்தை வாங்க முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தூய்மையான மற்றும் குறைந்த விலையில் தங்கத்தை வாங்க சிறந்த இடங்கள்

தி டெய்லி ஜாக்ரன் செய்தியின் அடிப்படயில் இந்தியாவில் சென்னை, திருச்சூர் உள்ளிட்ட 5 இடங்களில் தூய்மையான மற்றும் விலை குறைவான தங்கம் விற்பனை செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

1. திருச்சூர், கேரளா 

கேரள மாநிலம் திருச்சூர் இந்தியாவின் தங்க கேப்பிட்டல் (Gold Capital of India) என அழைக்கப்படுகிறது. இது தூய்மையான தங்கத்திற்கும், வடிவமைப்புக்கும் பெயர் போனதாக உள்ளது என கூறப்படுகிறது.

2. சென்னை, தமிழ்நாடு

தமிழகத்தை பொருத்தவரை சென்னை மிக குறைந்த விலையில் தங்கம் விற்பனை செய்யப்படுவதற்கு பெயர் போன பகுதியாக உள்ளது. சென்னையில் விற்பனை செய்யப்படும் தென்னிந்திய வடிவங்கள் தரம் மற்றும் தூய்மைக்கு பெயர் போனதாக உள்ளது என கூறப்படுகிறது.

3. கோயம்புத்தூர், தமிழ்நாடு

தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருத்தவரை ஃபேஷன் மற்றும் மிக குறைந்த எடை கொண்ட தங்க நகைகளுக்கு பெயர் போனதாக உள்ளது. அதுமட்டுமன்றி, பாரம்பரியமான தங்க நகைகளும் இங்கு கிடைப்பதால் தங்கம் வாங்க சிறந்த இடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

4. ஹைதராபாத், தெலங்கான

தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் பவளம் பதிக்கப்பட்ட தங்க நகைகளுக்கு மிகவும் பெயர் போனதாக உள்ளது. ஹைதராபாத்தில் குறிப்பாக சார்மினார், புஞ்சகுட்டா உள்ளிட்ட பகுதிகளில் தென்னிந்திய வடிவம் கொண்ட நகைகள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன என கூறப்படுகிறது.

5. மும்பை, மகாராஷ்டிரா

மும்பையின் மகாராஷ்டிரா பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்க மார்க்கெட் ஆன சவேரி பஜார் (Zaveri Bazar) அமைந்துள்ளது. இந்த பகுதியில் பாரம்பரிய வடிவங்களை கொண்ட தங்க நகைகள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன என கூறப்படுகிறது.

Follow Us