2026 – 27 நிதியாண்டு.. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள முக்கிய வருமான வரி விதி மாற்றங்கள்!
Revised Income Tax Rules Effective From Today | 2026 - 2027 நிதியாண்டு இன்று தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இந்த நிதியாண்டு முதல் பல்வேறு முக்கிய வருமான வரி விகிதங்களில் மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
2026 – 2027 நிதியாண்டு (2026 – 2027 Financial Year) இன்று (ஏப்ரல் 01, 2026) தொடங்கியுள்ளது. இந்த நிதியாண்டில் பல்வேறு நிதி தொடர்பான மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில், இந்திய வருமான வரித்துறை (Income Tax Department Of India) வருமான வரி விதிகளில் (Income Tax Rules) சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தம் செய்யப்பட்ட வருமான வரி விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், திருத்தம் செய்யப்பட்ட வருமான வரி விதிகள் கூறுவது என்ன, அவற்றின் மூலம் ஏற்பட உள்ள முக்கிய மாற்றங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வருமான வரி விதிகளில் அமலுக்கு வந்துள்ள அதிரடி மாற்றங்கள்
2026 – 2027 ஆம் நிதியாண்டுக்கான முதல் நாளான இன்று மாற்றம் செய்யப்பட்ட வருமான வரி விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
புதிய வருமான வரி சட்டம்
ஏற்கனவே அமலில் இருந்த 1961 ஆம் ஆண்டின் வருமான வரி சட்டத்திற்கு பதிலாக, புதிய வருமான வரி சட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
வருமான வரி தாக்கல் காலக்கெடு
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது, ஐடிஆர் 3 மற்றும் 4 தாக்கல் செய்யும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலக்கெடு ஜூலை 31 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு வரலாறு காணாத சரிவு – என்ன காரணம்?
திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல்
ஏற்கனவே தாக்கல் செய்த கணக்கு தாக்கலில் திருத்தங்களை மேற்கொள்ள விருன்பினால் அதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, டிசம்பர் 31 ஆம் தேதியில் இருந்து மார்ச் 31 ஆம் தேதியாக நீட்டிக்கப்படுள்ளது. ஆனால் இதில் ஒரு சிறிய சிக்கல் உள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மேல் தாக்கல் செய்யும் நபர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
டிசிஎஸ்
பெரும்பாலான பொருட்களுக்கு டிசிஎஸ் 2 சதவீதம் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மதுபான விற்பனைக்கு 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பீடி சுற்ற பயன்படுத்தப்படும் டெண்டு இலைகளுக்கு 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்கிராப் விற்பனைக்கு 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகவும், கனிமங்களுக்கு 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!
எஸ்டிடி அதிகரிப்பு
பியூச்சர் வர்த்தகத்திற்கான எஸ்டிடி 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆப்ஷன் பிரீமியம் 0.1 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆப்ஷன் எக்சர்சைஸ் 0,125 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.