AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு… எவ்வளவு தெரியுமா?

Commercial LPG Cylinders Price Hike: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்தவகையில், ஏப்ரல் மாதத்திற்கான விலையை இன்று மாற்றியமைத்த எண்ணெய் நிறுவனங்கள் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளன.

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு… எவ்வளவு தெரியுமா?
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 01 Apr 2026 07:34 AM IST

Commercial LPG Cylinders: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஏப்ரல் மாத முதல் நாளான இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளன. ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலையை (Gas Cylinder Price) மாற்றி அமைக்கும். அதன்படி, சென்னையில் 19.5 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் விலை ரூ.203 அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய ஹோட்டல்கள் நடத்துபவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கெனவே, அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடால் தினசரி ஹோட்டல்களை நடத்துவதில் பெரும் சிக்கல் நிலவி வரும் நிலையில், இந்த விலை உயர்வு மேலும் இடியாய் அமைந்துள்ளது. சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பல்வேறு உணவு பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு வரலாறு காணாத சரிவு – என்ன காரணம்?

2வது முறையாக வணிக சிலிண்டர் விலை உயர்வு:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்தவகையில், ஏப்ரல் மாதத்திற்கான விலையை இன்று மாற்றியமைத்த எண்ணெய் நிறுவனங்கள் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளன. ஏற்கெனவே, அமெரிக்கா – ஈரான் போர் தொடங்கிய சில நாட்களில் வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது போர் தொடங்கிய பிறகு 2வது முறையாக மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மார்ச் 7ல் தான் விலை உயர்ந்தது:

மார்ச் 6ம் தேதி வரை ரூ.1,929க்கு விற்பனை செய்யப்பட்ட 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் திடீரென மார்ச் 7ம் தேதி விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு மாத தொடக்கத்தில் மட்டுமே கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக விலையை உயர்த்தின. அதன்படி, வணிக பயன்பாட்டு 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.115 உயர்ந்து, ரூ.2,043.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

 

மீண்டும் அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை:

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 01, 2026) வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நேற்று (மார்ச் 31, 2026) வரை ரூ.2,043.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேஸ் சிலிண்டர் தற்போது ரூ.2,240.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க : கலால் வரி குறைக்கப்பட்டும் பெட்ரோல், டீசல் விலைகள் குறையவில்லை – காரணம் என்ன?

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை:

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது வழக்கம் போல வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.928-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்படாதது சாமானிய மக்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.

Follow Us