Silver : வெள்ளி வாங்கும் திட்டமா?.. இதனை கவனியுங்கள்.. அடுத்த சில மாதங்களில் தலைகீழாக மாற போகும் நிலை!
Know These Facts Before Buying Silver | சமீப காலமாக வெள்ளி மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், பலரும் வெள்ளியில் முதலீடு செய்யலாமா என யோசித்து வருகின்றனர். இந்த நிலையில், வரும்காலங்களில் வெள்ளி விலை குறைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
சமீப காலமாக வெள்ளி (Silver) மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தங்கத்திற்கு (Gold) ஈடாக வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக பலரும் தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து யோசித்து வருகின்றனர். ஆனால், வெள்ளியில் முதலீடு செய்வது அவ்வளவு பாதுகப்பானது இல்லை என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், அடுத்த சில மாதங்களில் தங்கம் கடுமையான சரிவை சந்திக்க உள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன.
எம்சிஎஸ்-ல் கணிசமாக குறைந்த வெள்ளி விலை
தங்கம் மற்றும் வெள்ளி விலை சமீபத்திய எம்சிஎக்ஸ்-ல் (MCX – Multi Commodity Exchange) கணிசமாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தைகளின் தாக்கம், டாலார் வலுப்பெறுவது மற்றும் முதலீட்டாளர்களின் எச்சரிக்கை ஆகியவற்றின் காரணமாக வெள்ளி விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு பல்வேறு காரணங்களால் வெள்ளி சரிவை சந்தித்துள்ள நிலையில், சந்தை எச்சரிக்கையாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : Aadhaar : பிவிசி ஆதார் கார்டுக்கான கட்டணம் அதிரடி உயர்வு.. இனி ரூ.50 இல்லை!
வெள்ளி வாங்கும் திட்டமா? – இதனை கவனியுங்கள்
வெள்ளி வாங்க நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள் என்றால், நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 80 டாலர் என்ற அளவை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் உள்ளது. வரும் காலங்களில் வெள்ளியில் கூர்மையான சரிவு ஏற்படும் என்பதற்கான எச்சரிக்கையாக இது உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : வட்டியே இல்லாமல் தங்க நகைகளை அடகு வைக்க முடியுமா?.. இந்த அம்சத்தை கொஞ்சம் பாருங்கள்!