இனி இந்த பண பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாம்.. பான் கார்டு விண்ணப்பத்திலும் மாற்றம்!

PAN Card is Mandatory for These Money Transactions | இந்தியர்களுக்கான மிக முக்கிய ஆவணமாக பான் கார்டு உள்ளது. ஒருவரின் நிதி நடவடிக்கைகளை இந்திய வருமான வரித்துறை, பான் கார்டு மூலம் கண்காணிக்கும் நிலையில், அது குறித்து முக்கிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இனி இந்த பண பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாம்.. பான் கார்டு விண்ணப்பத்திலும் மாற்றம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

01 Apr 2026 15:58 PM

 IST

இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக பான் கார்டு (PAN Card) உள்ளது. வங்கி கணக்கு திறப்பது, பண பரிவர்த்தனை மேற்கொள்வது என பல சேவைகளுக்கு பான் கார்டு மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. இவ்வாறு, பொதுமக்களின் வாழ்வில் மிக முக்கிய ஆவணமாக உள்ள இந்த பான் கார்டு குறித்த சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பான் கார்டு விண்ணப்பிக்க இனி இது கட்டாயம்

18 வயதுக்கு மேற்பட்ட தனியாக வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கு பான் கார்டு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், பான் கார்டு விண்ணப்பிக்கும் முறையில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானதாக இருந்த நிலையில், இன்று (ஏப்ரல் 01, 2026) அதில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இனி பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் கார்டுடன் சேர்த்து பிறந்த தேதியை உறுதி செய்யும் ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. அரசு அறிவிப்பு!

பான் கார்டு தொடர்பான சேவைகளில் வந்த முக்கிய மாற்றங்கள்

பான் கார்டு பயன்படுத்துவது தொடர்பான சில முக்கிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதாவது, சில பரிவர்த்தனைகளுக்கு கட்டாயம் பான் கார்டு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

  • ரூ.10 லட்சத்திற்கும் மேல் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்தால் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும்.
  • ரூ.5 லட்சங்களுக்கு மேல் வாகனங்கள் வாங்கும்போது பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும்.
  • ரூ.20 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும்.
  • ரூ.1 லட்சத்திற்கும் மேல் ஓட்டல்களில் பணம் செலுத்தினாலோ, நிகழ்சிகளுக்கு செலவு செய்தாலோ பான் கார்டு வழங்க வேண்டும்.

இதையும் படிங்க : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு வரலாறு காணாத சரிவு – என்ன காரணம்?

ஒருவரில் பண பரிவர்த்தனை நடவடிக்கைகளை இந்திய வருமான வரித்துறை (Income Tax Of India) பான் கார்டு மூலம் கண்காணிக்கும் நிலையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளில் பணம் செலவு செய்தால் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதியை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..