90 நாட்களில் PNG இணைப்பு பெற வேண்டும்.. கெடு விதித்த அரசு.. மீறினால் என்ன ஆகும்?
LPG to PNG Conversion | இந்தியாவில் உள்ள குடும்பங்கள், அதாவது பிஎன்ஜி அமைப்புகளுக்கு அருகே உள்ள குடும்பங்கள் தங்களது எல்பிஜி கேஸ் இணைப்பை பிஎன்ஜியாக மாற்ற வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. அதற்கு 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குடும்பங்கள் தங்களது எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பை (LPG Gas Cylinder Connection) பிஎன்ஜி இணைப்பாக (PNG Connection) மாற்றம் செய்ய 90 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது. குடும்பங்கள் தங்களது எல்பிஜி இணைப்புகளை பைப்பிடு நேச்சுரல் கேஸ் (PNG – Piped Natural Gas) இணைப்பாக மாற்றம் செய்ய வைக்க அரசு இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. பிஎன்ஜி நெட்வொர்குக்கு (PNG Network) அருகே வசிக்கும் குடும்பங்கள் அடுத்த 90 நாட்களுக்குள்ளாக தங்களது பிஎன்ஜி இணைப்பு விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில், எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பை பிஎன்ஜி இணைப்பாக மாற்றுவது எப்படி என்பது குறித்து தெரிந்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எல்பிஜி இணைப்பில் இருந்து பிஎன்ஜி இணைப்புக்கு மாற்ற அவகாசம்
மத்திய கிழக்கு போரின் போது கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவிடம் கச்சா எண்ணெய் இருப்பு மிகவும் குறைவாக மட்டுமே இருக்கும். எனவே தான், அரசு குடும்பங்களை பிஎன்ஜி இணைப்பை பெற்றுக்கொள்ளுமாறு கூறியது. இந்த நிலையில் தான், அது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, பிஎன்ஜி அமைப்புக்கு அருகில் வசிக்கும் நபர்கள் தங்களது எல்பிஜி இணைப்புகளை பிஎன்ஜியாக மாற்றம் வேண்டும் என கூறியுள்ளது. இதற்கு 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பின்ஜி இணைப்பாக மாற்றாதவர்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : உலக நாடுகள் உடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் போட்ட இந்தியா.. ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு!