வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால் சிக்கல்?.. நேரடி வரிகள் வாரியம் கூறுவது என்ன?
Keeping More Than 100 Grams Of Gold | இந்திய பாரம்பரியத்தில் தங்கம் மிக முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இந்திய குடும்பங்கள் தங்களது வீடுகளில் தங்கம் வைத்திருப்பர். இந்த நிலையில், ஒருவர் தனது வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்திய கலாச்சாரத்தில் தங்கம் (Gold) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண், பெண் என்ற பாகுபாடுகள் இன்றி தங்கத்தை அனைவரும் அணிவது வழக்கம். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஏதேனும் சுப காரியங்கள் நடைபெறுகிறது என்றால் அதில் ஒரு கிராம் தங்கமாவது கட்டாயம் இருக்கும். இவ்வாறு மிக முக்கிய பொருளாதார மற்றும் மரபின் வெளிப்பாடாக தங்கம் உள்ளது. உலக அளவில் அதிகம் தங்கம் நுகரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக தங்கம் ஒரு உணர்வுப்பூர்வமான சொத்தாக வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், இந்தியாவில் ஒருவர் தனது வீட்டில் எத்தனை கிராம் வரை தங்க நகைகளை வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால் சிக்கல்?
இந்தியாவில் ஒருவர் தனது வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதற்கான சட்டப்பூர்வ உச்ச வரம்பு எதுவும் இல்லை. தங்கம் வாங்கியதற்கான வருமான ஆதாரம் சரியாக இருக்கும் பட்சத்தில் ஒருவர் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் வீட்டில் வைத்துக்கொள்ளலாம். இதுவே உங்களிடம் 100 கிராமுக்கு மேல் தங்கம் உள்ளது, ஆனால் உங்களிடம் அதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்றால் நீங்கள் வருமான வரித்துறையின் விசாரணை வளையத்திற்குள் சிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க : ஏடிஎம்மில் ரூ.3,000 எடுக்க முயன்ற நபர் – 9 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.3 லட்சமாக வழங்கிய வங்கி – என்ன நடந்தது?
யார் யார் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் – சிபிடிடி
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT – Central Board of Direct Taxes) ஒரு நபர் தனது வீட்டில் வருமான ஆதாரங்களை நிரூபிக்காமல் எந்த அளவு தங்கம் வைத்திருக்கலாம் என்று ஒரு வரையறையை வைத்துள்ளது.
- திருமணமான பெண்கள் – 500 கிராம் வரை தங்க நகைகளை வைத்துக்கொள்ளலாம்.
- திருமணமாகாத பெண்கள் – 250 கிராம் வரை தங்க நகைகளை வைத்துக்கொள்ளலாம்.
- திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள் – 100 கிராம் வரை தங்க நகைகளை வைத்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : ஏப்ரல் 1 முதல் இந்த வங்கிகளின் ஏடிஎம் விதிகளில் மாற்றம் – கூடுதல் கட்டணம் செலுத்த நேரலாம்!
வருமான வரித்துறையின் சோதனையின் போது தனிப்பட்ட நபர்கள் மேற்குறிப்பிட்ட அளவு தங்கத்தை தங்களது வீட்டில் வைத்திருக்கலாம். அப்போது பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது. இதுவே மேற்குறிப்பிட்ட அளவுக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கத்தை வைத்திருந்தால் வருமான வரித்துறை பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.