Bank Holiday : ஜூலை மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!
July 2025 Bank Holidays India | ஒவ்வொரு மாதமும் சில காரணங்களுக்காக சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் 2025 ஜுலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2025 ஜூலை மாதத்தில் மொத்தம் 13 நாட்கள் வங்கிகள் செயல்படாது என கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் அரசு விடுமுறை, திருவிழா, உள்ளூர் விடுமுறை உள்ளிட்டவை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை (Bank Holiday) அளிக்கப்படும். இந்த நிலையில், 2025 ஜூன் மாதம் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் 2025 ஜூலை மாதம் தொடங்க உள்ளது. அந்த வகையில் ஜூலை மாதத்திலும் சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2025 ஜூலை மாதத்தில் எந்த எந்த நாட்கள் வங்கிகள் செயல்படாது, வங்கிகள் செயல்படாத போது பொதுமக்கள் மாற்றாக வேறு என்ன சேவைகளை பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜூலை மாதத்தில் 13 நாட்கள் வங்கிகள் செயல்படாது
- ஜூலை 3, 2025 – கராச்சி பூஜா என்பதால் அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை.
- ஜூலை 5, 2025 – குரு ஹர்கோபிந்தி பிறந்தநாள் என்பதால் அன்று ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
- ஜூலை 6, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
- ஜூலை 12, 2025 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
- ஜூலை 13, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
- ஜூலை 14, 2025 – பெஹ்தீன்க்லாம் என்பதால் ஷில்லாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை.
- ஜூலை 16, 2025 – ஹரேலா பண்டிகை என்பதால் டேராடூனில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
- ஜூலை 17, 2025 – யூ டிரோத் சிங் நினைவு தினம் என்பதால் அன்றைய தினம் ஷில்லாங்கில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
- ஜூலை 19, 2025 – கையிர் பூஜா என்பதால் அகர்தலாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
- ஜூலை 20, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
- ஜூலை 26, 2025 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
- ஜூலை 27, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
- ஜூலை 28, 2025 – ட்ருக்பா செச்சு என்பதால் அன்றைய தினம் கேங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை.
மேற்குறிப்பிட்ட இந்த 13 நாட்கள் 2025 ஜூலை மாதத்தில் வங்கிகள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.




வங்கி விடுமுறையின் போது என்ன செய்யலாம்?
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் பண பரிவர்த்தனை சேவைகளை அதிகம் பயனபடுத்துகின்றனர். எனவே, பண பரிவர்த்தனை உள்ளிட்ட தேவைகள் உள்ள பொதுமக்கள் வங்கிகளின் இணைய சேவை, மொபைல் செயலிகள், ஏடிஎம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். இவை வழக்கம் போல செயல்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.