ஜூலை 14 வரை டிக்கெட் தள்ளுபடி சலுகை – ரயில் பயணிகளுக்கு செம வாய்ப்பு ! – விவரம் இதோ
Rail Ticket Discount Offer : இந்தியாவில் ரயிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரயில் ஒன் செயலில் டிக்கெட் செய்யும் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகையை எப்படி பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம
வருகிற ஜூலை 14, 20026 வரை ரயில் ஒன் செயலியில் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதுவரை ரயில் டிக்கெட் புக் செய்யவிருக்கும் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தியாவில் ரயிலில் மட்டும் தினமும் லட்டணக்காண பயணிகள் பயனித்து வருகின்றனர். மற்ற போக்குவரத்து முறைகளை காட்டிலும் சிறந்த பயண அனுபவம், குறைந்த கட்டணம் என மக்களுக்கு பல நன்மைகளை இந்திய ரயில்வே வழங்குகிறது. இந்த நிலையில் கூடுதல் நன்மையாக தற்போது சிறப்பு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய ரயில்வேயின் ரயில் ஒன் செயலியில், முன்பதிவு செய்யப்படாத பொது டிக்கெட்டுகளில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூலை 14, 2026 வரை ரயில் ஒன் செயலியின் மூலம் முன்பதிவு அல்லாத பொது டிக்கெட்டுகளை மபுக் செய்து யுபிஐ போன்ற டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 3 சதவிகிதம் வரை தள்ளுபடியை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயிலில் தினமும் அல்லது அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இது சிறப்பான வாய்ப்பாக கருதப்படுகிறது.
இந்த தள்ளுபடியை எப்படி பெறுவது?
இது தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளுக்கான தள்ளுபடியை பெற முதலில் இந்திய ரயிலவேயின் ரயில் ஒன் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். ரயில் ஒன் செயலியில் லாகின் செய்த பிறகு, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டை புக் செய்யலாம். யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்துவதன் மூலம் 3 சதவிகிதம் வரை தள்ளுபடி பெற முடியும்.
உதாரணமாக உங்கள் ரயில் டிக்கெட் கட்டணம் ரூ.100 என்றால், ரயில்ஒன் செயலியின் மூலம் முன்பதிவு செய்வதன் மூலம் நீங்கள் ரூ.97 செலுத்தினால் மட்டும் போதும். ஒரு குடும்பத்தில் 4,.5 பேருக்கு டிக்கெட் புக் செய்யும்போது இது மிகப்பெரிய லாபமாக இருக்கும். மேலும் வேலை சார்ந்து தினமும் ரயிலில் பயணிப்பவர்கள், அடிக்கடி பயணிப்பவர்களுக்கு இந்த சலுகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாதாந்திர பட்ஜெட்டில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
இதுவரை ரயில் தொடர்பாக பயணிகள் தனித்தனி செயலிகளை பயன்படுத்தி வந்த நிலையில் அனைத்து பணிகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வகையில் இந்த ரயில் ஒன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ரயிலின் நிலை, பிளாட்ஃபார்ம் எண்,, பெட்டியின் நிலை போன்ற அனைத்து விவரங்களையும் பெறலாம்.