Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிஎஃப் பணத்தை எத்தனை முறை எடுக்கலாம்.. விதிகள் கூறுவது என்ன.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Provident Fund Money Withdrawal Rules | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில், ஊழியர்கள் தங்கள் தேவைகளின்போது பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் இருந்து எத்தனை முறை பணம் எடுக்கலாம், அதற்கான விதிகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிஎஃப் பணத்தை எத்தனை முறை எடுக்கலாம்.. விதிகள் கூறுவது என்ன.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 26 Apr 2025 21:29 PM

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் நலனுக்கான ஒரு அமைப்பு தான் இந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). இந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு அதில் அவர்களது மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். இபிஎஃப்ஓவின் இந்த அம்சத்தில் பயன்பெற அரசு ஊழியர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர்.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம்

இந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் வரவு வைக்கப்படும் பணத்திற்கு வட்டி வழங்கப்படும். இந்த நிலையில், ஊழியர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் இந்த பணத்தை எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த பணத்தை பெறுவதற்கு மருத்துவம், திருமணம் உள்ளிட்ட சில முக்கிய காரணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் இருந்து ஊழியர்கள் பணத்தை எடுப்பதற்கு எத்தனை முறை அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இபிஎஃப்ஓவில் எத்தனை முறை பணம் எடுக்கலாம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தை பொறுத்தவரை திருமணம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் எடுக்கலாம். ஆனால், இந்த ஒவ்வொரு காரணங்களுக்காக பணம் எடுப்பதற்கு வரம்பு உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருமணம் அல்லது கல்விக்காக பணம் எடுப்பது?

குறைந்தது 7 ஆண்டுகள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு, தங்களது திருமணம் மற்றும் கல்விக்காக பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. இபிஎஃப்ஓவில் உள்ள பணத்தை 50 சதவீதம் வரை எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, திருமணம் மற்றும் கல்விக்காக மொத்தம் 3 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், திருமணத்திற்கு ஒருமுறை பணம் எடுத்தால் மீண்டும் 2 முறை மட்டுமே திருமணம் மற்றும் கல்விக்காக பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.

மருத்துவ செலவிற்கு பணம் எடுப்பது

இபிஎஃப்ஓவில் புதியதாக சேர்ந்த உறுப்பினர்களும் தங்களது மருத்துவ தேவைகளுக்காக பணம் எடுக்கலாம். மருத்துவ தேவையை பொறுத்தவரை , ஊழியர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் இருந்து பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு வரம்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா...
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!...
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்......
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்...
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!...
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்...