மிகப்பெரிய விலை உயர்வுக்கு தயாராகி வரும் தங்கம்.. நிபுணர்களின் ஷாக் கணிப்பு!
Gold Price Hike | தங்கம் விலை பல்வேறு காரணிகளை மையப்படுத்தியதாக உள்ளது. அதாவது, கால சூழலுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், விரைவில் தங்கம் மிகப்பெரிய உயர்வை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
புவிசார் பதற்றம், பொருளாதார சூழல், பங்குச்சந்தை, தேவை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளி (Gold and Silver) விலையில் மாற்றம் ஏற்படும். தற்போதைய சூழலில் புவுசார் பதற்றங்கள் அதிகமாக இருந்தாலும், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரிய அளவு மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. தங்கம் விலை பெரிய அளவு உயர்வை சந்திக்காமலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் விலை குறையாமலும் உள்ளது. இந்த சூழலில் தான், விரைவில் தங்கம் மிகப்பெரிய விலை உயர்வை சந்திக்க உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். சில முக்கிய காரணிகள் இதற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தங்கம் மிகப்பெரிய அளவில் விலை உயர்வை சந்திக்க உள்ளது
கோடியா அட்வைசரிஸ் தங்கத்திற்கும், அமெரிக்க பங்குச் சந்தையின் எஸ்&பி 500 குறியீடுக்கும் இடையிலான விகிதத்தை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் பார்க்கும்போது, தங்கம் பங்கு சந்தையை விட அதிக லாபம் தரக்கூடிய ஒரு முதலீடாக மாறப்போகிறது என கூறப்படுகிறது. அதாவது, பணவீக்கம் அதிகரிப்பது, நாணயத்தின் மதிப்பிழப்பு குறித்த கவலைகள், நிதி தொடர்பான நிச்சயமற்ற தன்மை ஆகியவை தங்கத்தின் விலையை உயர்த்தும் முக்கிய காரணிகளாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பொதுப் பெட்டிகள் ஏன் ரயிலின் முன் மற்றும் பின்பகுதியில் மட்டும் அமைந்துள்ளன?
இத்தகைய சூழல்கள் நிலவும் போதெல்லாம் உலக பணக்காரர்கள் நிதி சார்ந்த சொத்துக்களை விடவும், பொருள் சார்ந்த சொத்துக்கள் மீது முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுவர் என கூறப்பட்டுள்ளது. இதனை ஒப்பிட்டு பார்க்கும்போது நிதி சார்ந்த சொத்துக்களான பங்குகளை விட பொருள் சார்ந்த சொத்துக்களாக இருக்கக்கூடிய தங்கம் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் உயர போகின்றன என்பதையே இந்த சிக்னல்கள் குறிப்பிடுகின்றன என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அடுத்த விலை உயர்வுக்கு தயாராகி வரும் தங்கம் – நிபுணர்கள்
தங்கம் மற்றும் எஸ்&பி 500 குறியீடு ஆகியவற்றின் இடையே உள்ள 5 மாதங்களுக்கான சார்டினை ஒப்பிட்டு பார்க்கும்போது True Strength Index ஒரு அரிதான அறிகுறியை காட்டுகிறது. இதன் மூலம் தங்கம் ஒரு மிகப்பெரிய விலை உயர்வுக்கு தயாராகி வருவது தெரிவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.