Gold Price : ஒரே நாளில் ரூ.600 உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Gold and Silver Price On July 30th | சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று கிராமுக்கு ரூ.75 மற்றும் சவரனுக்கு ரூ.600 உயர்வை சந்தித்து விற்பனையாகிறது.
சென்னை, ஜூலை 30 : புவிசார் பதற்றங்கள் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு நாள் விலை உயர்வை சந்திக்கும் தங்கம், மறுநாள் கடும் சரிவை சந்திக்கிறது. குறிப்பாக நேற்று (ஜூலை 29, 2026) தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்த நிலையில், இன்று (ஜூலை 31, 2026) தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை
கச்சா எண்ணெய் விலை உயர்வு, புவிசார் பதற்றம், அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு கிராம் தங்கம் ரூ.15,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.13,000-க்கு விற்பனையாகிறது. ஜூன் மாதம் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம் ஒரு கிராம் ரூ.13,000-க்கு கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களுடன் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் சிக்கன் பிரியாணி.. ஆகஸ்ட் 5 பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு வெளியாகுமா?
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
சென்னையில் இன்று (ஜூலை 30, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,230-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.