AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : சரிவை சந்தித்த தங்கம் விலை.. வெள்ளி விலையில் மாற்றமில்லை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold and Silver Price In Chennai Today | சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : சரிவை சந்தித்த தங்கம் விலை.. வெள்ளி விலையில் மாற்றமில்லை.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 May 2026 11:45 AM IST

சென்னை, மே 23 : மேற்கு ஆசியா போர் காரணமாக நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளி விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை சரிசை சந்தித்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேற்கு ஆசியா போர் காரணமாக ஏற்ற, இறக்கத்தில் தங்கம் விலை

மேற்கு ஆசியா போர் எதிரொலி காரணமாக உலக நாடுகள் கடும் சவால்களை சந்தித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக உலக அளவில் புவிசார் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தான், தங்கம் மற்றும் வெள்ளி விலையும் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : சம்பளம் வந்ததும் பணம் காலியாகிவிடுகிறதா?.. இனி உங்கள் நிதி மேலாண்மையை சாட்ஜிபிடி பார்த்துக்கொள்ளும்!

கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
14 மே 2026 ரூ.15,050 ரூ.1,20,400
15 மே 2026 ரூ.14,765 ரூ.1,18,120
16 மே 2026 ரூ.14,750 ரூ.1,18,000
17 மே 2026 ரூ.14,750 ரூ.1,18,000
18 மே 2026 ரூ.14.750 ரூ.1,18,000
19 மே 2026 ரூ.14,870 ரூ.1,18,960
20 மே 2026 ரூ.14,750 ரூ.1,18,000
21 மே 2026 ரூ,14,810 ரூ.1,18,480
22 மே 2026 ரூ.14,780 ரூ.1,18,240
23 மே 2026 ரூ.14,730 ரூ.1,17,840

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,730-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, வெள்ளி ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : ஜூன் மாதத்தில் ஆர்பிஐ எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. வீடு, வாகன கடன் வட்டி உயரும்?

மேற்கு ஆசியா போர் காரணமாக அன்னிய செலாவணி அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியர்கள் ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us