ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம்.. மீண்டும் ரூ.90,000-க்கு விற்பனை!
Gold Price Reduced in Chennai | தங்கம் விலை கடந்த சில நாட்களாக சற்று விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று (நவம்பர் 04, 2025) அதிரடியாக விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
                                சென்னை, நவம்பர் 04 : தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாக சற்று விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று (நவம்பர் 04, 2025) அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.11,250-க்கும், ஒரு சவரன் ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (நவம்பர் 03, 2025) வரை தங்கம் ரூ.90,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் உச்சத்திற்கு பிறகு சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை
2025 தங்கத்திற்கு ஒரு ஜாக்பாட் ஆண்டாக அமைந்துள்ளது. காரணம், இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக அக்டோபர் 21, 2025 அன்று தங்கம் ரூ.97,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படும் என்ற சூழல் உருவானது. ஆனால், அதற்கு அடுத்த நாளே தங்கம் கடுமையான சரிவை சந்தித்தது. அதாவது அக்டோபர் 22, 2025 அன்று சர்வதேச சந்தையில் தங்கம் 6.3 சதவீதம் சரிவை சந்தித்தது.
இதையும் படிங்க : Gold Price : மீண்டும் எழ தொடங்கிய தங்கம்.. இனி வரும் காலங்களில் மேலும் விலை உயருமா?




மீண்டும் குறைந்த தங்கம் விலை – ரூ.90,000-க்கு விற்பனை
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் | 
| அக்டோபர் 26, 2025 | ரூ.11,500 | ரூ.92,000 | 
| அக்டோபர் 27, 2025 | ரூ.11,450 | ரூ.91,600 | 
| அக்டோபர் 28, 2025 | ரூ.11,075 | ரூ.88,600 | 
| அக்டோபர் 29, 2025 | ரூ.11,325 | ரூ.90,600 | 
| அக்டோபர் 30, 2025 | ரூ.11,300 | ரூ.90,400 | 
| அக்டோபர்31, 2025 | ரூ.11,300 | ரூ.90,400 | 
| நவம்பர் 1, 2025 | ரூ.11,310 | ரூ.90,480 | 
| நவம்பர் 2, 2025 | ரூ.11,310 | ரூ.90,480 | 
| நவம்பர் 3, 2025 | ரூ.11,350 | ரூ.90,800 | 
| நவம்பர் 4, 2025 | ரூ.11,250 | ரூ.90,000 | 
Gold Price : சற்று விலை குறைந்த தங்கம்.. தற்போது முதலீடு செய்யலாமா?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன?
ஒரே நாளில் ரூ.800 குறைந்த தங்கம் விலை
அக்டோபர் 28, 2025 அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.88,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தங்கம் சிறிய அளவிலான விலை உயர்வை அடைந்து வந்தது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 04, 2025) தங்கம் மீண்டும் அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதாவது தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11,250-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.