Gold Price : ஒரே நாளில் ரூ.2,000 விலை குறைந்த தங்கம்.. தொடர் உயர்வுக்கு மத்தியில் சிறிய ஆதரவு!

Gold Price Reduced 2000 Per Sovereign | தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று (அக்டோபர் 18, 2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.250 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price : ஒரே நாளில் ரூ.2,000 விலை குறைந்த தங்கம்.. தொடர் உயர்வுக்கு மத்தியில் சிறிய ஆதரவு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

18 Oct 2025 11:44 AM

 IST

தங்கம் கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று (அக்டோபர் 18, 2025) தங்கம் விலை (Gold Price) அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது இன்றைய நிலவரப்படி தங்கம் விலை ரூ.2,000 குறைந்துள்ளது. இதன் காரணமாக நேற்று (அக்டோபர் 17, 2025) ரூ.97,000-த்தை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு சவரன் 22 காரட் தங்கம் தற்போது ரூ.95,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளியும் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் விலை உயர்வுக்கு மத்தியில் குறைந்த தங்கம் விலை

  • அக்டோபர் 10, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,340-க்கும், ஒரு சவரன் ரூ.90,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • அக்டோபர் 11, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,500-க்கும், ஒரு சவரன் ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • அக்டோபர் 12, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,500-க்கும், ஒரு சவரன் ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • அக்டோபர் 13, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,580-க்கும், ஒரு சவரன் ரூ.90,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • அக்டோபர் 14, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,825-க்கும், ஒரு சவரன் ரூ.94,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • அக்டோபர் 15, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,860-க்கும், ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • அக்டோபர் 16, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,900-க்கும், ஒரு சவரன் ரூ.95,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • அக்டோபர் 17, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • அக்டோபர் 18, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,950-க்கும், ஒரு சவரன் ரூ.95,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க : வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. EMI குறையபோகுது!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

நேற்று (அக்டோபர் 17, 2025) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.11,950-க்கும் ஒரு சவரன் ரூ.95,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது நேற்று (அக்டோபர் 17, 2025) ஒரு கிராம் ரூ.203-க்கும், ஒரு சவரன் ரூ.2,03,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (அக்டோபர் 18, 2025) கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் ரூ.190-க்கும், ஒரு கிலோ ரூ.1,90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.