Gold Price : ஒரே நாளில் ரூ.2,720 உயர்ந்த தங்கம் விலை.. ரூ.10,000 உயர்ந்த வெள்ளி!
Gold and Silver Price Increased In Chennai Today | தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை கண்டு வரும் நிலையில், இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஏப்ரல் 08 : ஈரான் போரால் (Iran War) தங்கம் விலை (Gold Price) கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், தற்போது ஈரான் மீதான தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதன் காரணமாக இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.340 உயந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த கடும் போர் காரணமாக உலக அளவில் மிக கடுமையான சவால்கள் ஏற்பட்டது. குறிப்பாக ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியதன் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, கேஸ் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவை ஏற்பட்டது. இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை கூறியும் ஈரான் அதற்கு செவி சாய்க்காமல் இருந்து வந்தது.
இதையும் படிங்க : புதிய ரேஷன் கார்டு கிடைப்பதில் சிக்கல்?.. வெளியான முக்கிய தகவல்!
இதன் காரணமாக நாளுக்கு நாள் கச்ச எண்ணெய் விலை உயர தொடங்கியது. மேலும் ஈரான் போர் காரணமாக புவிசார் பதற்றங்களும் அதிகரித்து வந்தன. இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை திறக்க டிரம்ப், ஈரானுக்கு கடைசி 48 மணி நேர எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அதற்கும் ஈரான் இணங்காத நிலையில், ஈரான் மீது மிக பயங்கர தாக்குதல் நடத்தப்போவதாக டிரம்ப் அறிவித்தார். இதற்கிடையே, ஈரானுக்கு இரண்டு வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என பாகிஸ்தான் பரிந்து பேசிய நிலையில், தற்போது போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க : பிபிஎஃப் திட்டத்தின் மீது குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.. அதற்கு முன்பு இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
ஈரான் மீது இரண்டு வாரங்களுக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இன்று தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.340 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.