Gold Price : தங்கம் விலை ஒரே நாளில் அபார உயர்வு.. ரூ.97,000-த்தை தாண்டி விற்பனை!

Gold Price Increased 2,000 Today | தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று (அக்டோபர் 21, 2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 மற்றும் சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்துள்ளது.

Gold Price : தங்கம் விலை ஒரே நாளில் அபார உயர்வு.. ரூ.97,000-த்தை தாண்டி விற்பனை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

21 Oct 2025 11:45 AM

 IST

சென்னை, அக்டோபர் 21 : தங்கம் விலை (Gold Price) மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 21, 2025) ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை ரூ.2,080 குறைந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் ரூ.97,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரே நாளில் கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில், வெள்ளி விலை (Silver Price) குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்

2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக 2025-ல் தங்கம் 45 சதவீதம் வரை விலை உயர்வு அடைந்துள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம் விரைவில் ரூ.1 லட்சத்தை தாண்டும் நிலை உள்ளது. நேற்று (அக்டோபர் 20, 2025) ஒரு சவரன் ரூ.95,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (அக்டோபர் 21, 2025) ரூ.97,000-த்தை தாண்டியுள்ளது.

இதையும் படிங்க : வீட்டு கடனை அடைக்க EMI அதிகரிப்பது Vs ப்ரீ பேமெண்ட் செய்வது.. இரண்டில் எது சிறந்தது!

10 நாட்களில் ரூ.5,000 உயர்ந்த தங்கம்

  • அக்டோபர் 12, 2025 – ஒரு கிராம் ரூ.11,500-க்கும், ஒரு சவரன் ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • அக்டோபர் 13, 2025 – ஒரு கிராம் ரூ.11,580-க்கும், ஒரு சவரன் ரூ.92,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • அக்டோபர் 14, 2025 – ஒரு கிராம் ரூ.11,825-க்கும், ஒரு சவரன் ரூ.94,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • அக்டோபர் 15, 2025 – ஒரு கிராம் ரூ.11,860-க்கும், ஒரு சவரன் ரூ.94,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • அக்டோபர் 16, 2025 – ஒரு கிராம் ரூ.11,900-க்கும், ஒரு சவரன் ரூ.95,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • அக்டோபர் 17, 2025 – ஒரு கிராம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • அக்டோபர் 18, 2025 – ஒரு கிராம் ரூ.12,000-க்கும், ஒரு சவரன் ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • அக்டோபர் 19, 2025 – ஒரு கிராம் ரூ.12,000-க்கும், ஒரு சவரன் ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • அக்டோபர் 20, 2025 – ஒரு கிராம் ரூ.11,920-க்கும், ஒரு சவரன் ரூ.95,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • அக்டோபர் 21, 2025 – ஒரு கிராம் ரூ.12,180-க்கும், ஒரு சவரன் ரூ.97,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க : Gold Price : ஒரே நாளில் ரூ.2,000 விலை குறைந்த தங்கம்.. தொடர் உயர்வுக்கு மத்தியில் சிறிய ஆதரவு!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

நேற்று (அக்டோபர் 20, 2025) ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.11,920-க்கும், ஒரு சவரன் ரூ.95,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 21, 2025) தங்கம் கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,180-க்கும், ஒரு சவரன் ரூ.97,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.188-க்கும், ஒரு சவரன் ரூ.1,88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்மிருதி மந்தானா மற்றும் பலாஷின் திருமணம் - நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சை
தெருவில் விடப்பட்ட பிறந்த குழந்தை.... இரவு முழுவதும் பாதுகாத்த தெரு நாய்கள் - நெகிழ்ச்சி சம்பவம்
மூளை கீழே விழும் விநோத நோய் - 14 ஆண்டுகளாக போராடும் ஆசிரியர்
சதமடித்த கோலி.. மனைவி அனுஷ்கா சர்மாவின் பதிவு..