Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்கம் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.. மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்!

Central Govt Explains Why Gold Price Hiked | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. அதன்படி நேற்று (டிசம்பர் 15, 2025) தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை உயர்வது குறித்து மத்திய நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

தங்கம் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.. மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Dec 2025 18:48 PM IST

புதுடெல்லி, டிசம்பர் 16 : இந்தியர்களின் பாரம்பரியத்திலும், கலாச்சாரத்திலும் முக்கிய பங்கு வகிப்பது தான் தங்கம் (Gold). இந்தியர்களுக்கு தங்க நகை வாங்குவது சேமிப்பு மட்டுமன்றி, அது பாரம்பரியமாகவும் உள்ளது. இதன் காரணமாக இந்தியர்கள் மத்தியில் தங்கம் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஆனால், தற்போது தங்கம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வை கண்டிருப்பது அவர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. நேற்று (டிசம்பர் 15, 2025) ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டிய நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை உயர்வு குறித்து மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கம் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்த மத்திய அரசு

நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில், தங்கம் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தங்கம் விலையை நிர்ணயப்பத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு இல்லை. சர்வதேச விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலை, வரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம், வெள்ளி விலை தீர்மானிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : Year Ender 2025: ஒரே ஆண்டில் 4 முறை குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம் – கடன்தாரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

தங்கம் விலை உயர்வுக்கு இதுதான் காரணம் – மத்திய அரசு

நடப்பாண்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தற்போதைய உயர்வுக்கு புவி அரசியல் பதற்றம் அதிகரித்து வருவதும், சர்வதேச வளர்ச்சி குறித்த நிச்சயமற்ற நிலையும் தான் காரணம். அதனால் பாதுகாப்பான முதலீட்டு தேவை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் மத்திய வங்கிகள் தங்கத்தை கனிசமாக கொள்முதல் செய்கின்றன. நுகர்வு, முதலீடு என இரண்டு முறைகளிலும் தங்கம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்கா : 20 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட், பங்குச்சந்தையை விட அதிக லாபம் தந்த தங்கம்!

தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. வீட்டில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு உயர்வதின் மூலம், தங்கம் விலை உயர்வை குடும்ப சொத்து உயர்வாக மக்கள் பார்க்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.